முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் அனைவருக்கும் இலவச கல்வி: சரத்குமார்

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      சினிமா
Image Unavailable

 

தென்காசி. ஜூன். 16 - தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர கல்வியை இலவசமாக வழங்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசியில் எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.

தென்காசி வ.உ.சி. நினைவு அரசு பொது நூலக வாசகர் பேரவை நடத்திய கல்வி வளர்ச்சி விருது வழங்கும் விழா தென்காசி நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்காசி வாசகர் பேரவையின் தலைவர் எஸ்.கே.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் கே.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.சேகர், கடையநல்லூர் எஸ்.முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நல் நூலகர் எம்.கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். நூலகர் கோ.இராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். ராணி அண்ணா கல்லூரி பேராசிரியர் டாக்டர் வி.குருமூர்த்தி, டி.என்.நீலகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

தென்காசி எம்.எல்.ஏ. ஆர்.சரத்குமார் தென்காசி பகுதியில் நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., 

ப்ளஸ் டூ தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 100 க்கும் அதிமான பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டில் பல அறிஞர்களை, அறிவாளிகளை உருவாக்கியது நூலகம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு எம்.எல்.ஏ. அப்பது எம்.பி. பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றால் அவர் அங்குள்ள நூலகத்திற்கு சென்று அங்குள்ள பல்வேறு அரிய நூல்களை படிக்க வேண்டும். அப்படி படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் சிற்பபாக பணியாற்றியுள்ளார்கள். மாணவர்கள், குழந்தைகள் அதிகமாக கேள்வி கேட்டால் தான் அவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் தெரியவரும். எனவே குழந்தைகள் கேள்வி கேட்கும் போது பெற்றோர்கள் கோபப்பட கூடாது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை பெற்றோர்கள் கூறவேண்டும்.

ஒரு காலத்தில் புத்தகம் படித்த காலம் போய் இப்போது கம்ப்யூட்டர் காலம் வந்து விட்டது. இப்போது எல்லா விஷயங்களையும் கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்வதோடு அதில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் அவ்வளவு வசதிகள் கிடைப்பதில்லை. எனவை அனைவருக்கும் பயன்தரும் வகையில் அரசு நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதனை அனைவரும் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

நான் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் எனது தந்தை ஆல்இண்டியா வானொலி நிலையத்தில் வேலை பார்த்தவர் ஆனாலும் என்னை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதை போலவே அனைவரும் தங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். 

இங்கு பேசிய அனைவரும் தென்காசி நூலகத்திறஅகு சொந்த கட்டிடம் இல்லை என்று கூறினார்கள். மேலும் நான் பொது நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். அந்த கோரிக்கையை நான் ஏற்று கொள்கிறேன். எம்.எல்.ஏ. நிதி மூலம் செய்ய முடியாவிட்டாலும், எனது சொந்த நிதியிலாவது தென்காசியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுவேன். மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்கு பேச கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு தாய் மொழி தமிழையும் நன்கு கற்று கொள்ள வேண்டும். இப்போது இந்த நூலகத்தில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக கூறினார்கள். விரைவில் 12 ஆயிரம் உறுப்பினர்கள் சேரவேண்டும். தென்காசி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபட்டு வருகிறேன். எனக்கு பல்வேறு பணிகள் உள்ளது. ஆனாலும் தென்காசி தொகுதி மக்களுக்கு நான் எப்போது முக்கியத்துவம் கொடுத்து பாடுபடுவேன். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கரை காட்ட வேண்டும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக நான் பாடுபடுவேன். நாளைய உலகம் இளைஞர்கள் உலகம் அதனை மனதில் கொண்டு இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.ஜெ.வி.

பெல், தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியின் முதல்வர் திருமலை, ஹாஜி முஸ்தபா கமால்முகைதீன், வாசகர் பேரவை துணைத்தலைவர் கு.அருணாசலம், இணைச்செயலாளர் சு.அருணாசலம், தென்காசி நகர் மன்றத் துணைத்தலைவர் வே.கோமதிநாயகம், ரோட்டரி கிளப் ஆளுனர் கே.ராஜகோபால், முருகேசன், ஜேக்கப் அருள்மாணிக்கம், நகர்மன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி தென்காசி நல் நூலகர் கணேசன், வாசகர் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் மாடசாமி பாண்டியன், எஸ்.கேசண்முகசுந்தரம், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார்,சாந்தசீலன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாடசாமி பாண்டியன், சமக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ்,  அமைப்பு செயலாளர் காளிதாசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுந்தர், நெல்லை மாவட்ட செயலாளர் தங்கராஜ், 

மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, தென்காசி நகர செயலாளர் வில்சன், தென்காசி ஒன்றிய செயலாளர் மிராசு, இலஞ்சி அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் சுந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்