630 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - இரா.விசுவநாதன் வழங்கினார்

dgperavai

 

திண்டுக்கல், பிப்.27​ - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 630 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட பேரவை செயலாளர் பாரதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் வி.ஜி.எஸ். மஹாலில் மாவட்ட ஜெ.பேரவை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு வேஷ்டி சேலைகள், விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், நலிந்த குடும்பப் பெண்களுக்கு இட்லி கடை வைப்பதற்கும், சிறுதொழில் செய்ய உதவித்தொகைகள், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு தேய்ப்புப் பெட்டி, ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள், பன்றிமலை கிளைக்கழக செயலாளர் சக்திவேல் மரணமடைந்ததை அடுத்து அவரது மனைவிக்கு குடும்ப நலநிதியாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் 630 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.   கூட்டத்தில் நகரச் செயலாளர் ராமுத்தேவர், தொகுதி செயலாளர் மருதராஜ், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன் பேசுகையில்,

கருணாநிதி பிறந்த நாள் விழா உண்டியல் வைத்து வசூல் செய்வதற்காகவே கொண்டாடப்படுகிறது. பணம் சேர்ப்பதிலேயே குறியாக உள்ளவர் அவர். கருணாநிதி தனது குடும்பத்தினருக்காக கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் அவர் அறிவித்தபடி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. அதன்மூலம் தி.மு.க. ஆட்சியின் கொடுமையால் அவதிப்பட்டு வரும் பல லட்சம் பேர்கள் பயனடைந்து வருகின்றனர். கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் பொதுமக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் பிரச்சனைகளை தீர்வு காணக்கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான். கடும் விலைவாசி உயர்வு குறித்து ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நன்றாக தெரிந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான நிர்வாகத்தினால் தான் விலைவாசி உயர்வு உட்பட அனைத்து பிரச்சனைகளும் உருவாகியுள்ளது. எனவே இதற்கு தீர்வு காண தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா வர வேண்டும் என்று பேசினார். 

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன்,  தொகுதி இணைச் செயலாளர் பழனிச்சாமி, இளைஞரணி செயலாளர் சரவணன், மாணவரணி செயலாளர் அன்வர்தீன், அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பிரபுராம், பாசறை செயலாளர் ஆனந்தகுமார்,  மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் திருமலைசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் ராஜேந்திரன், முத்துச்சாமி, கோபாலகிருஷ்ணன், எஸ்.வி.ராமமூர்த்தி, பொன் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ஏ.சுப்பிரமணி,  இணைச் செயலாளர் இக்பால், மருத்துவரணி இணைச் செயலாளர் லோகநாதன், நகர இளைஞரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் இளங்கோ, ஒன்றியச் செயலாளர் ஜெயசீலன், பி.ஜெயராஜ், செல்வராஜ்,  பாசறை செயலாளர் வேலவன், சின்னு, செல்வராஜ், பழநி பேரவை நகரச் செயலாளர் கணேசன்,   நகரத் துணைச் செயலாளர் சேசு, நகர இணை செயலாளர் விஜயலட்சுமி, துணைச் செயலாளர் அமுதா காளிமுத்து, மார்க்கோபோலோ, வெங்கடேசன், பிரபு, மணிகண்டன், மாரிமுத்து, ராஜன், கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில அமைப்புசாரா ஓட்டுனரணி துணைச் செயலாளர் பழக்கடை நாகராஜன் வரவேற்புரையாற்றினார். நகர பேரவை செயலாளர் டி.வி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்