முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்கீல் சதீஷ்குமார் மர்ம சாவு குறித்த ஆவணங்கள் ஒப்படைப்பு

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன், 18 - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ்குமார் மர்ம சாவு குறித்த வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து அதற்குரிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம், அண்ணாநகர் போலீசார் ஒப்படைத்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:-

அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியை சேர்ந்த வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்.   வக்கீல் படிப்பை முடித்திருந்த இவர் கடந்த 7​ந் தேதி இரவு காணாமல் போனார். திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். 7 நாட்களுக்கு பின்னர் ஐ.சி.எப். வடக்கு காலனியில் உள்ள ஏரியில் சதீஷ்குமார் உடல் மீட்கப்பட்டது.

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதற்கிடையே வக்கீல் சங்கரசுப்பு சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்று வியாழன் காலை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 2 மணி நேரத்திற்குள் திருமங்கலம் போலீசார் வழக்கு பற்றிய விசாரணை விவரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டிருந்தது.   

இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. சதீஷ்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவது தொடர்பான கடிதம் அன்று இரவு தயாரானது. திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, இக்கடிதம் மற்றும் வழக்கு விசாரணை விவரங்கள், பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோ சி.டி.க்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார். சி.பி.ஐ. போலீசார் உடனடியாக தங்களது முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். சதீஷ்குமாரின் கொலைக்கு இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோர்தான் தூண்டுதலாக இருந்துள்ளதாக வக்கீல் சங்கரசுப்பு புகார் தெரிவித்திருந்தார். 

இதனால் 2 இன்ஸ்பெக்டர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. வக்கீல் சதீஷ்குமார் கொலையில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அவர் பிணமாக கிடந்த ஏரி அருகே உள்ள பாழடைந்த nullங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. இந்த nullங்காவுக்குள் எது நடந்தாலும் வெளியில் தெரியாது. ஆனால் சதீஷ்குமார் அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித தடயங்களும் காணப்படவில்லை. 

எனவே வெளியில் எங்காவது வைத்து அவரை கொலை செய்து உடலை ஏரியில் வீசியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது   சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்டு மூச்சுக் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. கை நரம்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வயிறு, முதுகு ஆகிய இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதிகமாக ரத்தம் வெளியேறியதால் சதீஷ்குமார் இறந்துள்ளதாகவும், கொலையாளிகள் சித்ரவதை செய்து அவரை கொன்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். 

சதீஷ்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டது. அவரது நண்பர்கள் பலரிடம் நேரில் சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால் சதீஷ்குமார் கொலை பற்றி எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை. அவரை கொலை செய்தது யார்? பின்னணி என்ன? போன்ற விவரங்களை சி.பி.ஐ. போலீசார் விரைவில் கண்டு பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்