ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் முதலாவதாக மேடை ஏறும் அரசு விழா

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

திருச்சி, ஜூன்.- 20 - திருச்சி திருவரங்கம் மேலச்சித்திரவீதியில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ரூ.306 கோடி மதிப்பிலான 38 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் சுமார் 430 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதற்கு முன்பு சென்னையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மிகவும் எளிமையாக தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா முதல்முறையாக மேடையில் பங்கேற்கும் அரசு விழா திருவரங்கத்தில் பங்கேற்ற இந்த அரசு விழாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் ஜெயலலிதா தான் முதல் அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே கட்சியினருக்கு ஆடம்பரங்களை செயல்படுத்தக்கூடாது என்று தடைவிதித்தார். இலவச அரிசி வழங்கும் விழாவும் மிகவும் எளிமையாகதான் முடிந்தது. அந்த வகையில் திருச்சியிலும் பிரமாண்டமான அலங்கார வளைவுகளோ, பிளக்ஸ் தட்டிகளோ அமைக்கப்பட்டவில்லை. ஓரிரு இடங்களில் சிறிய அளவில் விளம்பர போர்டுகளே வைத்துள்ளனர். கட்சிக்கொடி தோரணங்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்: