முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் டென்னிஸ்: நடால்-ஆன்டி முர்ரே முன்னேற்றம்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 24 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரி வின் 2 -வது சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான ரபேல் நடால் மற்றும் ஆன்டி முர்ரே இருவரும் வெற்றி பெற்று 3 -வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்போட்டி தற்போது விறுவிறுப்பாகன கட்டத்தை அடைந்துள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் தரமான ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் மெ ய் சிலிர்த்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்த து. இதில் ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், அமெரிக் க வீரர் ரியான் சுவிட்டிங்கும் மோதினர். 

இந்தப் போட்டியில் நடால் அபாரமாக ஆடி, 6 - 3, 6 - 2, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் இளம் வீரரான ரியானை எளி தாக தோற்கடித்து 3 - வது சுற்றுக்குள் நுழைந்தார். 

இந்த ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நடாலின் ஷாட்டுகள் முத்தி ரை பதிப்பதாக இருந்தது. அமெரிக்க வீரரால் ரபேலுக்கு ஈடுகொடுத் து ஆட முடியவில்லை. இருந்த போதிலும், அவர் போராடினார். 

இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஆன்டி முர்ரேவும், ஜெர்மனி வீரர் டோபியாசும் ஒற்றையர் பிரிவின் மற்றொரு 2 -வது சுற்று ஆட்டம் ஒன்றில் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் அனுபவமிக்க வீரரான முர்ரே சிறப்பான ஆட்டத் திறனை வெ ளிப்படுத்தினார் . அவர் இறுதியில், 6 - 3, 6 - 3, 7 - 5 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவினார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் 4 -ம் நிலை வீரராவார். இந்தப் போட்டி சுமார்  1 மணி மற்று ம் 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்