முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி விசா மூலம் மலேசியா பயணம்: 4 பேர் கைது

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - போலி விசா மூலம் மலேசியாவுக்கு வேலைக்கு செல்ல முயன்ற தஞ்சாவூரை சேர்ந்த 4 வாலிபர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை அழைத்து வந்த ஏஜெண்ட் விமான நிலையத்தில் தப்பி ஓடிவிட்டான்.

சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்தவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 வாலிபர்கள் போலி விசா வைத்து இருந்தது தெரியவந்தது. அவர்களை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்த ஷாஜகான் (26), அறந்தாங்கி சையத் அஜ்மல்கான் (30), சித்திக் (28), அக்பர் அலி (19) என்பது தெரிந்தது. தஞ்சாவூரை சேர்ந்த ஏஜெண்ட் சாகுல் அமீது அவர்களிடம் மலேசியாவில் கூலி வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ.1 லட்சம் வாங்கி போலி விசாவில் அனுப்பி இருந்தது தெரிய வந்தது. 

4 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் பிடித்ததை பார்த்த ஏஜெண்டு சாகுல் அமீது விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்