முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த விலையில் பருப்பு, பாமாயில்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 28 - ரேஷனில் குறைந்த விலையில் பருப்பு, பாமாயில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் வெளிமார்க்கெட்டை விட குறைந்த விலையில் உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டன. இதுதவிர 25 ரூபாய்க்கு 10 மசாலா பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டன. மானிய விலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு இந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.  இந்த சிறப்பு விநியோக திட்டத்தை இந்த அரசு நீnullட்டிப்பு செய்துள்ளது. ஜூன் மாதம் வரை செயல்படுவதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீnullட்டிப்பு செய்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் இறுதிவரை சிறப்பு விநியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி பாமாயில் கிலோ ரூ. 25-ம், பருப்பு வகைகள் கிலோ ரூ.30-க்கும் விற்கப்படும். இந்த திட்டத்துக்காக 6 ஆயிரம் டன் உளுத்தம்பருப்பு, 6 ஆயிரம் டன் துவரம் பருப்பும் அரசு கொள்முதல் செய்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்