முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் ஆதரவை திரட்ட ஹசாரேவுக்கு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ,ஜூலை.1 - சாகும்வரை மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்பு மக்களின் ஆதரவை திரட்டுங்கள் என்று அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பதில் மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்குவேன் என்று அண்ணாஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மத்திய அரசு கலங்கிப்போய் உள்ளது. 

ஹசாரேயின் இந்த அறிவிப்பு குறித்து நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வருகின்ற ஆகஸ்ட் 16-ம் தேதியில் இருந்து மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக அண்ணா ஹசாரே கூறியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பு மக்களின் ஆதரவை ஹசாரே திரட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உண்ணாவிரதம் இருக்க அண்ணாஹசாரே எடுத்திருக்கும் முடிவு சரிதான். இதில் தவறு ஏதும் இல்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி தேவைப்படும்போது மக்களின் ஆதரவை பெறுவதற்காக போராட்டம் நடத்துவார். போராட்டத்தின்போது மக்களின் ஆதரவை திரட்டுவார். அதன் பின்னர்தான் உண்ணாவிரதம் இருப்பார். மகாத்மா காந்தி மாதிரி உண்ணாவிரதத்திற்கு முன்பு போராட்டம் நடத்தி மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று திக்விஜய் சிங் கூறினார். 

லோக்பால் மசோதாவிற்கான வரைவை அண்ணா ஹசாரே தலைமையிலான சிவில் பிரதிநிதிகள் தயார் செய்துள்ளனர். இதர பணிகளை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள் என்றும் திக்விஜய் சிங் கூறினார். 

ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்று நிருபர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் திக்விஜய் சிங் கூறினார். 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய் விட்டது. சிறையில் இருப்பவர்களுக்குக்கூட போதுமான பாதுகாப்பு இல்லை. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய உமாபாரதி, அந்த கட்சியை கடுமையாக குறை கூறி பேசினார். இப்போது அதேகட்சியில் மீண்டும் சேர்ந்து தனக்கு ஆதரவான கருத்தை கூறியுள்ளார் என்றும் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்