முக்கிய செய்திகள்

பரத் நடிக்கும் ``யுவன் - யுவதி''

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை-ஜூலை-2​-ராம் பிக்சர்ஸ் டாக்டர் வி.ராம்தாஸ் வழங்கும் யுவன் யுவதி படத்தின் படப்பிடிப்பு முடிடைந்தது. இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக மிஸ் கேரளா பட்டம் பெற்றவரும், கேரளாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ரீமா கல்லிங்கல் தமிழில் அறிமுகமாகிறார். நகைச்சுவைக்காக சந்தானம், முக்கிய வேடத்தில் சம்பத் நடிக்கிறார். மற்றும் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இளையதலைமுறையினருக்கான ரசனை உள்ளது. விஜய் ஆண்டனி இசைத்திருக்கிறார். கலை - என்.பலையராஜா, பாடல்கள் - அண்ணாமலை, கலைக்குமார பிரியம், நடனம் -விஷ்னுமத்தா, பிரசன்னா சுஜிர் பாபி, ஸ்டன்ஸ் - சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை -கே.வி.ஜெய்ராம், ஸ்டில்ஸ் - சுரேஷ் மெர்லின், எடிட்டிங் - பிரபாகர், கதை - திரைக்கதை - இயக்கம் - ஜி.என்.ஆர்.குமரவேல்.. யாங் ஜெனரேசன். மனதில் நினைத்தாலே இனிக்கும் என்று ரொமாண்டிக் இயக்குனராக இடம் பிடித்த இவர் இயக்கும் அடுத்த ரொமான்டிக் காமெடி படம் யுவன் - யுவதி.

தயாரிப்பா - பைஜா. இவர் ஏராளமான செலவு செய்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

ஷாப்பிங் பாலில், பிட்சா காரனாரில் காப் ஷாபில் என நாம் அன்றாடம் பார்க்கும் இளைஞர்களில் ஒருவனாக கதிர் என்ற யுவனுக்கும், நிஷா என்ற யுவதிக்கும் நடக்கும் லவ்வும் அதன் சைட் எபக்ட்டுகளுமே யுவன் - யுவதி.

முதன் முறையாக தென்னாப்பிரிக்காவின் பல முக்கிய நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: