முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வர் மாயாவதியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

லக்னோ,ஜூலை.3 - சர்ச்சைக்குரிய லோக்பால் மசோதா விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியை அன்னா ஹசாரே குழுவினர் நேற்று சந்தித்து பேசினார்கள்.வலிமையான லோக்பால் மசோதா உருவாக வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பாடுபட்டு வருகிறார். இதன் பொருட்டு அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து தன் முயற்சிக்கு ஆதரவு தேடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று அன்னா ஹசாரே குழுவினர் லோக்பால் மசோதா தொடர்பாக உ.பி. முதல்வர் மாயாவதியை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த 30 ம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ்குமாரையும் மற்றும் பா.ஜ.க தலைவர்களையும் சந்தித்து லோக்பால் மசோதா குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஏற்கனவே அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் பல்வேறு தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவர் நேற்று சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!