முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற 11 கிராமவாசிகளும் விடுதலை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஜூலை - 4 - பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற 11 கிராமவாசிகளும் நேற்று விடுதலை  செய்யப்பட்டனர். பீகார் மாநிலம்  முங்கேர் மாவட்டத்தில் உள்ள கரீலி என்ற கிராமத்தில்  கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினார்கள். பயங்கர ஆயுதங்களுடன் வந்த இவர்கள் அந்த கிராமத்தில்  6 பேரை சுட்டுக்கொன்றனர். இவர்களில் இரண்டு பேர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள்.
ஆறு பேரை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டு நக்சலைட்டு  தீவிரவாதிகள் அந்த கிராமத்தில் இருந்து 11 பேரை கடத்திச் சென்றனர். கடத்தி சென்றவர்களை மீட்க  பஸ்ராஹா வனப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளைப் பிடிக்க மத்திய  ரிசர்வ் போலீஸ் படையினரும் போலீசாரும் கூட்டாக தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட 11 பேரும் அந்த வனப்பகுதியிலிருந்து  மாவோயிஸ்டுகளால் விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 11 பேரையும் பாதுகாப்பு  படையினர் பத்திரமாக மீட்டு அவர்களது  சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பீகாரில் மாவோயிஸ்டு நக்சலைட்டு  தீவிரவாதிகளின் வன்முறை அட்டூழியம்  தொடந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களை ஒடுக்க மத்திய மாநில பாதுகாப்பு  படையினர்  தீவிர  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்