முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளத்தில் தவறி விழுந்து அமர்நாத் யாத்ரீகர் பலி

புதன்கிழமை, 6 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

ஸ்ரீநகர், ஜூலை - 7 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இடறி விழுந்து பலியானார். காஷ்மீர் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை கடந்த ஜூன் மாதம் 29 ம் தேதி குறுக்குவழி பாதையான பல்தால் மற்றும் பாரம்பரிய பாதையான பாகல்காம் ஆகியவற்றின் வழியாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக சென்றுகொண்டிருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த மிது ரஸ்தோகி என்ற 48 வயது யாத்ரீகர் பாகல்காம் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது சேஷாங் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ஒரு சிறு பாலத்தில் இருந்து இடறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவரை மீட்க மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார். அவரது சடலத்தை மீட்புப் படையினர் மீட்டெடுத்தனர். இந்த ஆண்டு யாத்திரையில் விபத்தினால் ஏற்பட்ட முதல் பலி இதுதான் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்