விவசாயிகள் இழிவுப்படுத்துகிறார் கருணாநிதி - நடிகர் ஆனந்தராஜ்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      சினிமா
anandraj

 

கரூர். பிப்.29 - கரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் மின்சாரம் திருடுவதாக கருணாநிதி இழிவுப்படுத்துகிறார் என்று நடிகர் ஆனந்தராஜ் குற்றம் சாட்டினார். கரூரில் ஜெயலலிதாவின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் நகர அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சிவலிங்கம் வரவேற்றார். திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் மற்றும் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

நடிகர் ஆனந்தராஜ் பேசுகையில், ஏழைகளுக்கு என்று விடிவுகாலமோ அன்றுதான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். எத்தனை பேர் கூட்டணி வந்தாலும் மக்கள்தான் ஜெயலலிதாவிற்கு நிரந்தர கூட்டணி. இந்த தேர்தலை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. அனைத்து நாடுகளும் வருகின்ற தேர்தலில் திமுக வெற்றி பெறாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்த பிறந்த நாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளாக அமையும். திமுக வினர் மாநாட்டை கூட்டம் போல் நடத்துகின்றனர். அதிமுகவினர் கூட்டத்தையே மாநாடு போல் நடத்துகின்றனர். 

nullநீங்கள் ஆற்றல் மிகுந்த மாவட்ட செயலாளரை பெற்றுள்ளீர்கள் என்று எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை குறிப்பிட்டார். இலவசம் என்ற போர்வையில் திமுகவினர் ஆட்சியை நடத்துகின்றனர். ரேசன்கடையில் கொடுக்கும் அரிசிக்கு மாநில அரசு 7 ரூபாயும், மத்திய அரசு 7 ரூபாயும் மானியம் வழங்குகின்றது. மக்களுடைய வரிப்பணத்தை வைத்துதான் 1 ரூபாய்க்கு அரிசு வழங்குகின்றனர். அரிசி வேண்டாம் அதற்கு பதிலாக மாதம் 300 ரூபாய் பணமாக தருவாரா என்று கேள்வி எழுப்பினார். அதைவைத்து நல்ல அரியை வாங்கி கொள்ளலாம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3.50 அரிசி வழங்கப்பட்டது. அந்த அரிசி நன்றாக இருந்தது. சாப்பிட முடுந்தது. 1 ரூபாய் அரிசியை சாப்பிட முடியவில்லை. விவசாயிகள் நாட்டில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். அவர்களை மின்சாரம் திருடுவதாக இழிவுபடுத்தியவர் கருணாநிதி என்று கூறினார்.

நிகழ்ச்சியில் 1063 பேருக்கு மரக்கன்று, குடம், டிபன்பாக்ஸ், வேஷ்டி சேலை உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சிவகாமி, நகர இணை செயலாளர் சின்னப்பொண்ணு, துணை செயலாளர் பாஸ்கரன், ஆண்டாள், பொருளாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், சசிகலா, பொருளாளர் முரளி, முன்னாள் மாவட்ட செயலாளர் கு.வடிவேல், சாகுல் அமீது, வழக்கறிஞர் கனகராஜ், அம்மா பேரவை காமராஜ், இளைஞரணி பாஸ்கரன், மாணவர் அணி மெட்ரோ பிரபு, பாசறை செந்தில்நாதன், சுந்தர்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 35வது வார்டு செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: