92 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
jaya1 0

சென்னை, ஜூலை.- 10 - மே தினத்தையொட்டி  அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 92 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/-​ ரூபாய் வீதம் மொத்தம் 23 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி 20-ம் தேதி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/-​ ரூபாய் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும்,  அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/-​ ரூபாய் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிதியுதவி பெற உள்ள நலிந்த தொழிலாளர்களின் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.  இவர்களுக்கான நிதியுதவி 20.7.2011 புதன் கிழமை அன்று சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: