முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை நோயை குணப்படுத்த ஒட்டகப்பால் மருந்து

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

சத்தீஸ்கர்-ஜூலை-16 - குறைவான செலவில் நிறைவான பலனை தந்து சர்க்கரை நோயை முற்றிலுமாக குணமாக்கிடும் ஒட்டகப் பால் மருந்து சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரை நோக்கி படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

வாழ்வு முறைகளில் மாற்றம், உணவுப் பொருட்களில் மாற்றம் மற்றும் பரம்பரை காரணிகளால் பொதுமக்களிடையே சர்க்கரை நோய் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்திட ஆங்கில மருந்துகளின் பயன்பாடே தற்போது நடைமுறையில் உள்ளது. எனினும் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக சிறுநீரக கோளாறு, பார்வையிழப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அல்லல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வரும் வகையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் ஒட்டகப்பால் மருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. துர்க் நகரில் உள்ள பள்ளிவாசலில் தங்கி சேவை புரிந்து வரும் ஒரு குடும்பத்தினர் அங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் மருந்தை வழங்கி வருகின்றனர். காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே வழங்கப்படும் இந்த மருந்தை வாங்க ஏராளமானோர் பள்ளிவாசல் முன்பு காத்துக் கிடக்கின்றனர். 

இந்த மருத்துக்காக ரூ. 120 ம், பள்ளிவாசல் நன்கொடையாக ரூ. 35 ம், ஆக மொத்தம் ரூ. 155 மட்டுமே நோயாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. மருந்து சாப்பிட துர்க் நகருக்கு வரும் நோயாளிகள் மருந்து சாப்பிட்ட பின் 4 மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாதாம். 2 மாதங்களுக்கு புளி, மாங்காய், கத்தரிக்காய் சேர்க்கக் கூடாதாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து மூன்று மாதம் சோதனை செய்து பார்த்து கொள்ளுமாறு நோயாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆஸ்துமாவிற்கு ஐதராபாத்தில் மீன் மருந்து வழங்குவது போல சத்தீஸ்கர் துர்க் நகரில் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒட்டகப் பால் மருந்து வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் இருந்து துர்க் நகருக்கு சென்று பயனடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் திருமங்கலத்தை சேர்ந்த முகமது மீரான் கூறுகையில், எனக்கு ஒட்டகப் பால் மருந்து குறித்து முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மருந்து சாப்பிட்டு விட்டு வந்த பிறகு சர்க்கரை நோயின் அறிகுறிகளே இல்லை. உடலிலும் புதிய தெம்பு ஏற்பட்டு இளைஞன் போல் செயல்படுகிறேன் என்றார். இதே போல எட்டுநாழியை சேர்ந்த பெரியபாண்டி கூறுகையில், 

துர்க் நகருக்கு சர்க்கரை நோயாளி ஒருவரை அழைத்து சென்ற நான் முன்னெச்சரிக்கையாக நானும் ஒட்டகப் பால் மருந்து அருந்தினேன். வீட்டுக்கு வரும் முன்னதாக எனது சிறுநீரகத்தில் இருந்து கற்கள் வெளியேறி நீர்க்கடுப்பு பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக தப்பினேன் என்றார். மதுரையை சேர்ந்த மெக்கானிக் ஷகீல் கூறுகையில், எனக்கு சர்க்கரை நோய் காரணமாக இரண்டரை ஆண்டுகளாக புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்தது. துர்க்  நகரில் 3 நாள் தங்கி ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டேன். ஊர் திரும்பும் முன்னரே எனது காயம் ஆறி குணமாகி விட்டது என்றார். இது போன்ற அதிசய நிகழ்வுகளால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கரை நோக்கி படையெடுத்து சென்று ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். ஆனால் மருந்து தயாரித்து வரும் குடும்பத்தினரோ தங்களது விபரங்கள் குறித்து விளம்பரம் செய்யாமல் இறைவனை நம்பி சேவை செய்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்