முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோ தலைமையில் ஆக.17-ல் உண்ணாவிரதம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில், கேரள அரசின் அக்கிரமபோக்கை கண்டித்து மதுரையில் ஆக.17-ம் தேதி வைகோ தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள்- ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆலோசனைக்குழு - அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை கட்சியின் அவைத்தலைவர் திருப்nullர் சு. துரைசாமி தலைமையில் சென்னை, தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மதுரையில் உண்ணாநிலை அறப்போர்!

தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடிய ஆபத்தாக, முல்லைப்பெரியாறு பிரச்சினை உருவெடுத்து உள்ளது. பென்னி குக் கட்டிய அணை வலுவாக இருக்கின்றது என்று, ஆண்டுக்கணக்கில் வழக்கு நடைபெற்று, அதில் உச்சnullதிமன்றத்தில் மூன்று nullநீதிபதிகள், தமிழகத்தின் அடிப்படை உரிமையை நிலைநாட்டி, nullநீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு என்றும், இதில் கேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும், திட்டவட்டமான தீர்ப்பை, 2006 பிப்ரவரி 27 இல் உச்சநீnullதிமன்றம் தந்து இருந்தது.

அதை எதிர்த்து, கேரளச் சட்டமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு உரிமை உண்டு என்றும், இதில் எந்த nullநீதிமன்றமும் தலையிட முடியாது என்றும் நிறைவேற்றிய சட்டம், இந்திய அரசின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பகிரங்கமாக விடுக்கப்பட்டு உள்ள சவால் ஆகும். இந்தப் போக்கை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமையில், மத்திய அரசு தவறியது. இதுகுறித்துத் தமிழக அரசு உச்சnull நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில், உச்சnull நீதிமன்றமும், கேரள அரசின் விபரீதமான நடவடிக்கையைக் கண்டிக்கவும் இல்லை,ரத்துச் செய்யவும் முன்வரவில்லை.

வழங்கப்பட்ட null நீதியைப் பறித்துக் கொள்ளும் வகையில், ஏற்கனவே உச்ச நீnullதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுக்களான பிரார் குழுவும், மிட்டல் குழுவும் தந்த அறிக்கைகளை உதாசீனம் செய்து விட்டு, பென்னி குக் கட்டிய அணை வலுவாக உள்ளதா? என்று ஆராயவும், கேரள அரசு உத்தேசிக்கின்ற புதிய அணை பற்றிக் கருத்து அறியவும், ஐந்து nullநீதிபதிகளைக் கொண்ட உச்சnullதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட்ட செய்தியாகும்.

உச்சnullநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பின்படி அமைக்கப்பட்ட குழு, ஆய்வுகள் மேற்கொள்ளும் காலகட்டத்திலேயே, நாங்கள் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரள அரசு அறிவித்ததோடு, அதற்கு ஐந்து கோடி ரூபாய் முதலீடாக ஒதுக்கியது. தற்போது புதிய அணைக்கான ஆய்வு வேலைகளில் பொறியாளர்களை ஈடுபடுத்தி

​வருகிறது. பென்னி குக் அணையை எவ்விதத்திலும் சேதப்படுத்திச் செயல் இழக்கச் செய்வதே கேரள அரசின் உண்மையான திட்டம். உத்தேசிக்கப்படும் அணை பள்ளத்தில் அமையும் என்பதால், கேரளம் விரும்பினாலும்கூட, பின்னாளில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரவே முடியாமல் போய்விடும்.

தெற்குச் சீமையில், ஐந்து மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசனத்தை இழப்பதற்கும், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில் குடிதண்ணீருக்கும் வழி இல்லாமல் போய்விடும்.

ஆபத்து வருமுன் காப்பதுதான அறிவு உடைமை ஆகும். எனவே, பென்னி குக் கட்டிய அணையைப் பாதுகாக்கவும், கேரள அரசு புதிய அணையைக் கட்ட விடாமல் தடுக்கவும், உரிய நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டாக

வேண்டும்.

எனவே, தென்பாண்டி மண்டலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து போராடி வருகின்ற ம.தி.மு.க, ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று, முல்லைப்பெரியாரில் தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப்போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில், மாபெரும் உண்ணாநிலை அறப் போராட்டத்தை, பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்துவது என்று, இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னுர் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில், இந்திய இராணுவம் தற்போது பயிற்சி அளித்து வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

ஈழத்தமிழர்கள் படுகொலை; டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைத் தாக்குதல்களில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இன்னமும், இலட்சக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டு

வாடித் தவிக்கின்றனர்.

சிங்களர்கள் நடத்திய அதிர்ச்சி தரும் படுகொலைக் காட்சிகளை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதன் விளைவாக, உலகின் பல நாடுகள் உண்மை நிலையை அறியத்தொடங்கி உள்ளன.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்​கி​மூன் அமைத்த மூவர் குழு தந்த அறிக்கையும், சிங்கள அரசு மனிதநேயச் சட்டங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என அனைத்துத் தமிழர்களையும் அழிக்கின்ற திட்டத்தோடு, இனப்படுகொலை நடத்தியதை உறுதி செய்து உள்ளது.

நாஜிகள் செய்த கொடுமைகளைப் போல, ஈழத்தமிழர்களை அழிக்கக் கொடுஞ்செயல் புரிந்த இனக்கொலை யுத்தத்துக்கு, காங்கிர தலைமையிலான இந்திய அரசு ஆயுத உதவி செய்ததுடன், சிங்கள அரசின் போரைப் பின்னால் இருந்து அனைத்து வழிகளிலும்

ஊக்குவித்து இயக்கியது, தமிழர்களுக்கு எதிரான, மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும்.

இராஜபக்சேயும், அவனது கூட்டாளிகளும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்; ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு, வட்டக்கோட்டைத் தீர்மானத்தின்படி ஒரே தீர்வான, சுதந்திர இறையாண்மை உள்ள தமிடிந ஈழத் திருநாட்டை அமைப்பதற்குப் பொது

வாக்கெடுப்பு நடத்திட வேண்டும்; இலங்கை அரசோடு இந்திய அரசு செய்து கொண்டு உள்ள வணிக, பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செடீநுதிட வேண்டும்; இதுவரை அனைத்து நாடுகள் மன்றத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவு தந்து வரும் போக்கை நிறுத்திக்கொண்டு, இனியாவது சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திடவும், இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு, பிரச்சினையை மக்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கவும், இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களையும் வேண்டிக் கொள்ளவும்; தலைநகர் டெல்லியில், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று,

நாடாளுமன்றத்துக்கு எதிரே, பொதுச்செயலாளர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று, இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்