டைரக்டர் சீமானுக்கு கொலை மிரட்டல்

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      சினிமா
Seeman1

 

சென்னை, மார்ச்.3 -  மாவீரன் ராஜபக்ஷேவுடன் மோதாதே,கட்சியை கலைத்துவிடு மீறினால் கொல்லப்படுவாய் என சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு பாண்டிசேரியிலிருந்து மர்ம ஆசாமி கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளான்.இதுப்பற்றி கமிஷ்னரிடம் புகார் அழிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் இருந்து ராம்கோபால் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சூளைமேடு கில் நகரில் உள்ள தமிழ் முழக்கம் அலுவலகத்துக்கு வந்தது. அதில், எச்சரிக்கை... எச்சரிக்கை என தொடங்கி சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் உங்கள் கட்சியின் புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்றவன். என் கட்டளைகளை ஏற்று நீnullங்கள் நடக்க வேண்டும். விடுதலைப்புலிகளை நீnullங்கள் ஆதரிக்கக் கூடாது. நாம் தமிழர் கட்சியை கலைத்து விட வேண்டும். மாவீரன் ராஜபக்ஷேவை எதிர்க்க கூடாது. மத்திய மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும். புதுக்கோட்டையில் புரட்சி செய்யக்கூடாது. மீறினால் கடுமையான பிரச்சினையை சந்திக்க நேரிடும். புதுச்சேரியில் உள்ள தாஸ், மகேஷ் சென்னையில் உள்ள ராசா, காமராசு மற்றும் கணேஷ், பிரபு ஆகிய உங்கள் கட்சியினர் வேட்டையாடப்படுவார்கள். புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்றவன் என்று தன்னை துணிச்சலோடு அடையாளப்படுத்தியுள்ள மர்ம நபரை போலீசார் உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை முத்துக்குமாரை கொன்ற கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது போன்ற மிரட்டல் கடிதங்களால் நாம் தமிழர் கட்சியை முடக்கி போட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து சாகுல் அமீது நிருபர்களிடம் கூறும் போது, மிரட்டல் கடிதத்தின் பின்னணியில் காங்கிரசார் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றார். இந்த மிரட்டல் கடிதம் நம்பர் 33, விட்டல் நகர், சண்முகபுரம், புதுவை என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் சீமானுடய பேச்சு காங்கிரஸுக்கு பின்னடைவை உண்டு பண்ணும் என்பதால் இது போன்ற வெத்து மிரட்டல்கள் வருகிறது என்று சீமான் ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: