முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழினத்தின் தலைவர் ஜெயலலிதா: அ.தி.மு.க. இலக்கிய அணி

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.28 -  ஈழத் தமிழர்கள் இன்னல் தீரவும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக  அறிவிக்க கோரியும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க கோரியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்துள்ளார் என்று அ.தி.மு.க. இலக்கிய அணி புகழாரம்  சூட்டியுள்ளது.அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இலக்கிய அணி செயலாளர்  வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை செயலாளர் நத்தம் கோபு (எ) ரகுராமன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வரவேற்றார். விருதுநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கே.கோபால்சாமி நன்றி கூறினார். 

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், செயலாளர் தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர்கள் தளவாய் சுந்தரம், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், பா.வளர்மதி, பொன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக அரசியல் வரலாற்றில் மகத்தான திருப்புமுனையாக வரலாறு காணாத வெற்றியை பெறுவதற்கு தியாக வேள்வியாய் திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியின் சார்பில் நன்றியையும், நல்வாழ்த்துக்களையும் பணிவோடு சமர்ப்பிக்கிறது. 

நான் தான் தமிழ், தமிழ் தான் நான் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்து கொண்டு ஈழத் தமிழர்களை காட்டிக் கொடுத்து, தமிழினத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்த கருணாநிதியை உலகுக்கு அடையாளம் காட்டி, கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்த ஈழத்தமிழினத்தை கொடியவன் சிங்கள வெறியன் மஹிந்த ராஜபக்ஷேவிடம் காட்டிக் கொடுத்து அதற்கு கைக் கூலியாக தனது குடும்பம் பிழைப்பு நடத்துவதற்கு மத்திய அரசில் பங்கேற்று டெல்லி வாலாக்களின் காலில் விழுந்த தமிழின துரோகி கருணாநிதி தன் கையாலாகாத தனத்தால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கவும், இன வெறியன் சிங்கள ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும், உலக வல்லரசு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை உலக நல்லரசின் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை செய்ததின் மூலம் உலகத் தமிழர்களின் நலன் காக்கப்பட, தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதின் மூலம் ஜெயலலிதா உலக தமிழினத்தின் ஒப்பற்ற தலைவராக மலர்ந்து வருகிறார். விரைவில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசை பெறுவார் என்பது சத்தியம். அத்தகையை சிறந்த நிகழ்வை எண்ணி, எண்ணி இலக்கிய அணி பூரிப்படைகிறது. 

முதல்வர் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றும் அனைத்து நலத்திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி குறித்த  அனைத்து திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளாட்சி மன்றங்கள்  பெரும்பங்கு வகிக்கும். எனவே உள்ளாட்சி தேர்தல்களிலும் 100 சதவீத வெற்றி பெற இன்று முதல் அ.தி.மு.க. இலக்கிய அணியின் சார்பாக ஆயுத்த பணிகளை தொடங்கி, கட்சி மகத்தான வெற்றியை பெற்று வெற்றிக் கனியை முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பது என்று சபதம் ஏற்கிறது. 

அ.தி.மு.க. வெற்றி பெற தமிழக மக்களின் துயர் துடைக்க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழை, எளிய மக்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தமிழக மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் 20 கிலோ அரிசி வழங்க  ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தியும் காட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு  இலக்கிய அணி நன்றியை காணிக்கையாக்குகிறது. 

அதேபோல் கிராம மக்களுக்கு இலவச ஆடுகள், கறவை மாடுகள், முதியோர் உதவித் தொகை உயர்வு, இலவச சைக்கிள், லேப்- டாப்,  மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஏழை பெண்கள் மணமுடிக்க திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு தங்கம் என பலவேறு திட்டங்களை செயல்படுத்தி தினசரி 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக உழைத்து ஏழைக்கு தங்கமாய் எதிரிக்கு சிங்கமாய் முதல்வர் திகழ்வதை எண்ணி இலக்கிய அணி இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது.  

கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி  அவரது வாரிசுகள் தி.மு.க.வின் அடாவடி கட்டப் பஞ்சாயத்து கும்பல்களின் மிரட்டல் உருட்டல்களினால் தனது சொத்துக்களை நிலங்களை இழந்து ஆட்சி அதிகாரங்களுக்கு பயந்து ஒதுங்கி நின்ற ஏழை எளிய மக்கள் மற்றும் நில உரிமையாளர்களின் இழந்த சொத்தை மீட்டுத்தர காவல்துறையில் தனிப்பிரிவை துவங்கி நடவடிக்கை எடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணியினர் பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்த இந்த 2 மாத காலத்தில் முதல்வர் ஜெயலலிதா அரசு நிகழ்த்தியுள்ள வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளையும், வருகிற பட்ஜெட்  கூட்ட தொடரில் அ.தி.மு.க. அரசு அறிவித்து செயல்படுத்த உள்ள மக்கள் நலத்திட்டங்கள் சாதனைகளை அடிதட்டு மக்களுக்கு கொண்டு செல்கிற விதமாக தெருமுனை பிரச்சார கூட்டங்கள், ஓரங்க நாடகங்கள், பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள்  நடத்தப்படும் என்று இலக்கிய அணி தீர்மானம் செய்கிறது. 

அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பாக மாவட்ட நிர்வாகிகளை அடையாளம் கண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்து வெற்றி பெற செய்து அழகு பார்க்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலக்கிய அணி தனது இதயபூர்வமான நன்றியினை காணிக்கையாக்குகிறது. 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்