முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் சாயப் பட்டறை பிரச்சினைக்கு தீர்வு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை 29 - சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் சாயப் பட்டறை பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருப்பூர் சாயப் பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்த அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று (ஜூலை 28) திருப்பூர் சலவை மற்றும் சாயப் பட்டறை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து சென்னை கோட்டையில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழில்துறை, சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     

திருப்nullர் பகுதியில் 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.  அவற்றில் 502 தொழிற்சாலைகள், 20 பொது கழிவுnullநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கழிவு nullநீரை சுத்திகரிப்பு செய்கின்றன.  எஞ்சிய 252 தொழிற்சாலைகள் தனித்தனியே சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளன.  இவைகளிலிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 87,250 கிலோ லிட்டர் கழிவு நீnullர் வெளியேற்றப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்பட்டு வந்தது.  திருப்nullர் பகுதி சாயப்பட்டறைகளால் விளை நிலங்களும், nullநீர் ஆதாரங்களும் மாசு அடைவதால் அதனை நிறுத்தக் கோரி கரூர் தாலுகா நொய்யல் கால்வாய் விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீnullதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு வழக்கினை தாக்கல் செய்தது.  அனைத்து சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென சென்னை உயர் nullநீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னரும், வெளியேற்றப்படும் கழிவு nullநீரால் பாதிப்பு ஏற்பட்டதால், 2003 ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசனதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது.   

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் nullநீதிமன்றம் தனது தீர்ப்பில், 31.7.2007​க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீnullர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலையை  அடைய வேண்டுமென்றும், அவ்வாறு அடையப்படவில்லை எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச nullநீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடையுத்தரவு பெற்றது.

உச்ச nullநீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், சென்னை உயர் nullநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுnullர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.   கழிவுநீnullர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர் nullநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, 28.1.2011 நாளிட்ட சென்னை உயர் nullநீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்nullர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன.

திருப்nullர் பகுதியில் உள்ள சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், திருப்nullர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப் போனது.  திருப்nullர் ஜவுளித் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.  தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியும் பாதிப்படைந்தது.  கழிவுநீnullர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலையை அடைந்தால் ஜவுளித் தொழில் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படும்.  எனவே, சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டால் தான், ஜவுளித் தொழில் வளர்ச்சி அடைய இயலும்.  அந்தப் பகுதி பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.  வேலை வாய்ப்பு ஏற்படவும் இது வழி வகுக்கும். ஆனால், கழிவு nullநீர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலையை அடைவதற்கான வழிமுறைகள் எதையும் கடந்த தி.மு.க. அரசு செய்யவில்லை.  எனவே, எங்கள் தேர்தல் அறிக்கையில், திருப்nullர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்திகரிக்கத் தேவையான தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதன் அடிப்படையில், என்னுடைய அறிவுரைக்கிணங்க, தொழில்கள் துறை அமைச்சர் தலைமையில் 27.5.2011, 30.5.2011, 17.6.2011 மற்றும் 20.6.2011 ஆகிய நாட்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், திருப்nullர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் இன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அதன் அடிப்படையில் திருப்nullர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது:​

திருப்nullர் பொது கழிவுnullநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுnullநீர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலையை எட்டுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை,  இயக்கி வரும் அருள்புரத்தில் உள்ள பொது கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை முறையில் கடைபிடிக்க நான் அறிவுறுத்தியதன் அடிப்படையில், அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, தற்போது பெறப்படும் 20 சதவீதம் கழிவுநீnullரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து, உப்பு nullநீரை மீண்டும் தொழிற்சாலையிலேயே உபயோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொழில்நுட்பம் இதுவரை வேறு எங்கும் கடைபிடிக்கப்படவில்லை.  எனவே, இந்தப் புதிய தொழில்நுட்பத்தை எல்லா கழிவுநீnullர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் கடைபிடிக்க இயலுமா என்பது சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு தான் தெரிய வரும்.

குஜராத் மாநிலம் பாரூச் என்னுமிடத்தில் 20 சதவீதம் கழிவுnullநீர் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, nullநீர் ஆவியாக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட நீnullரும், பெறப்படும் உப்பும் மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை திருப்nullரில் கடைபிடிக்க இயலுமா என்பதை ஆராய, மாசுக் கட்டுப்பாடு வாரியம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் திருப்nullர் சாயப் பட்டறை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு இந்த வாரத்தில் குஜராத் மாநிலத்திற்குச் செல்லும்.  பொது கழிவுnullநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்சொன்ன இரண்டு தொழிற்நுட்பங்களில் ஏதாவது ஒரு தொழிற்நுட்பத்தைக் கடைபிடிக்க, ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சுமார் 10 கோடி ரூபாய் தேவைப்படும்.  அதாவது, மொத்தத்தில் சுமார் 200 கோடி ரூபாய் தேவைப்படும்.  அந்தத் தொகை, வட்டியில்லா கடனாக அரசால் வழங்கப்படும்.

மேலும், குஜராத் மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பது என்றாலும், அல்லது அருள்புரத்தில் சோதனை முறையில் கையாளப்படும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பது என்றாலும், அதற்கு சுமார் இரண்டு மாத காலமாகும்.  எனவே, எந்தத் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பது என்பது குறித்து இரண்டு மாத காலத்திற்குள் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கூடுதல் சுத்திகரிப்பு உபகரணங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன் பின், சோதனை முறையில் மூன்று மாதங்கள் இயக்கிய பின்னர், சென்னை உயர் nullநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கும்.

திருப்nullர் பகுதி சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் தடையின்றி இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே நேரத்தில், விவசாயிகளின் நலனும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.  தற்போது கடைபிடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, கழிவுnullநீர் வெளியேற்றத்தில் nullஜ்ஜிய நிலை எட்டப்படுவதால், விவசாயிகளின் உரிமைகள் முழுவதுமாக பாதுகாக்கப்படும்.  மேலும், சென்னை உயர் nullநீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்தவும், சென்னை உயர் nullநீதிமன்றம் 49 கோடியே 29 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.  அதில், 37 கோடியே 11 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

6 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்த பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  11 கோடியே 96 லட்சம் ரூபாய், பாதிக்கப்பட்ட 17,758 விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை 18 கோடியே 38 லட்சம் ரூபாய் ஆகும். இழப்பீடு இன்னமும் வழங்கப்படாத விவசாயிகளின் எண்ணிக்கை 10,838 ஆகும். விவசாயிகள் உயர் nullநீதிமன்ற ஆணை பெற்ற பிறகு தான், இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க இயலும்.  இருப்பினும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த 18 கோடியே 38 லட்சம் ரூபாயை உடனடியாக அரசே வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இது தவிர, சென்னை உயர் nullநீதிமன்ற ஆணையின்படி, 62 கோடியே 37 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு, வட்டியுடன் தற்போது 67 கோடியாக உள்ளது.  இதில் 25 கோடி ரூபாய் சென்னை உயர் nullநீதிமன்றத்திலும், 42 கோடி ரூபாய் மாவட்ட ஆட்சியரிடமும் உள்ளது.   இந்தத் தொகை, சென்னை உயர் நீnullதிமன்ற உத்தரவைப் பெற்று, விவசாயிகளுக்கு இழப்பீடாகவும், பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் nullநீர் ஆதாரங்களை சீர் செய்யவும் பயன்படுத்தப்படும்.

மேலும், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த நிலங்களில் விவசாயிகள் என்ன பயிர் செய்யலாம் என்பதற்கான அறிவுரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகள், nullண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் திருப்nullர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், திருப்nullர் பகுதியில் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்