முக்கிய செய்திகள்

வருமானத்தை அதிகரிக்க ரயில் கட்டணம் உயருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.7 - ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. குளிர்சாதன வசதியுள்ள வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு கட்டணங்களையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. ரயில்வே அமைச்சராக இருந்த லல்லு பிரசாத், பல சலுகைகளை அளித்தால் ரயில்வே துறைக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்தார். அவர் பல சலுகைகளை அளித்தாலும் வேறுவழியில் வருமானத்தை பெருக்கினார். அதனால் ரயில்வேயிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதனையடுத்து ரயில்வே அமைச்சராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி பயணிகளுக்கு பல சலுகைகளை அளித்தார். மறைமுகமாக வருமானத்தை பெருக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ரயல்வேயின் வருமானம் குறைந்துவிட்டது. மேலும் பல ரயில்வே திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கு செலவு அதிகமாகும். மேலும் புதிய திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். இதற்கெல்லாம் நிதி வேண்டுமென்றால் ரயில்வே கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய தணிக்கை குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. டீசல் விலை அதிகரித்துவிட்டதால் ரயில்களை இயக்க செலவு அதிகமாகிறது. அதனால் சரக்கு கட்டணத்தையும் உயர்த்தலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் பல்வேறு ஊழல் பிரச்சினைகள் மற்றும் பெட்ரோல்,டீசல், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவைகளின் விலையை மத்திய அரசு உயர்த்தி இருப்பதால் மக்களிடத்தில் அதிருப்தி இருக்கிறது. இதுகுறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்த பின்னரே ரயில்வே கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: