முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான தொடரே கடைசி தொடர்: டிராவிட்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், அக்.8 - சர்வதேச ஒருநாள் மற்றும் டுவெண்டி -20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக கருதப்படும் வீரர்களில்  ஒருவரான ராகுல் டிராவிட் அதிரடியாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில்  நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் சச்சின் ஒரு சதம் அடித்து சதங்களில் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவர் ஏமாற்ற, டிராவிட் இரண்டு டெஸ்ட்களில் சதமடித்து ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கினார். இந்திய பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படுபவர் டிராவிட்.  இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் அணியில் இடம்பெறாத ராகுல்டிராவிட், இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவெண்டி - 20 அணியில் இடம்பெற்றார். இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ராகுல் டிராவிட் சர்வதேச ஒருநாள் மற்றும் டுவெண்டி - 20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இங்கிலாந்திற்கு எதிரான இந்த ஒருநாள் தொடரே தனது கடைசி தொடர் என்றும் டிராவிட் அறிவித்துவிட்டார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போது அந்த பெருமை எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் சர்வதேச ஒருநாள் மற்றும் டுவெண்டி - 20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். இந்த முடிவை நான் இன்னும் கிரிக்கெட் வாரியத்திடமோ, தேர்வுக் குழுவிடமோ தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த தொடர் முடிந்தவுடன் எனது ஓய்வு முடிவை அறிவித்துவிடுவேன். அடுத்ததாக டெஸ்ட் தொடர்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன் என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில் இங்கிலாந்திற்கு எதிரான மீதமுள்ள தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார். 

38 வயதான ராகுல் டிராவிட் இதுவரை 339 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,765 ரன்களை குவித்துள்ளார். 12 சதங்களையும், 82 அரை சதங்களையும் இவர் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 153 இவரது அதிகபட்சமாகும்.  இந்திய அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் டிராவிட். 

டுவெண்டி - 20யில் 66 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் 1530 ரன்களை எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்