முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமை செயலகத்தில் நவீன ஆஸ்பத்திரி பா.ம.க. ராமதாஸ் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக - 21 -  புதிய தலைமை செயலகத்தில்  டெல்லியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைபோல் அனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் புதிய தலைமை செயலக கட்டடத்தின் ஒரு பகுதி அதிஉயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும், தற்போது கட்டப்பட்டுவரும் மற்றொரு பகுதி மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என்றும் முதல்​அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் புதிய தலைமை செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால்தான் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே, புதிய தலைமை செயலகம் பயன்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டபோது அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன் பின்னர் தலைமை செயலகம் சென்னை கோட்டைக்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் புதிய தலைமை செயலகத்தை ஆக்கnullர்வமான வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு இணையாக புதிய தலைமை செயலகத்தில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்கலாம் என்றும் கடந்த 11​ந்தேதி  தெரிவித்திருந்தேன்.
இந்த நிலையில் புதிய தலைமை செயலக கட்டிடம் அதி உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும், அங்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் முதல்​அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. புதிய தலைமை செயலகம் பயன்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்ததால் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அக்கட்டிடத்தின் எதிர்காலம் என்ன ஆகுமோ,  மக்களின் வரிப்பணம் வீணாய் போகுமோ என்ற கவலை அனைவர் மனதிலும் எழுந்திருந்தது. ஆனால் புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என முடிவு எடுத்ததன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்பட்டு இருக்கிறது வரவேற்தக்கது என்று  டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்