முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்: கூட்டுக்குழு தலைவராக பி.சி. சாக்கோ நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
p c chacko 0

 

புது டெல்லி,மார்ச்.- 6 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டை விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதாகும் சாக்கோ கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 30 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக சாக்கோவை, மக்களவை தலைவர் மீராகுமார் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இடம் பெறுவர். 

கடந்த 1998 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு துறையில் வழங்கப்பட்ட உரிமங்கள், அரசு கடைப்பிடித்த தொலைத் தொடர்பு கொள்கைகள், வெவ்வேறு அரசுகளில் அமைச்சரவை தொலைத் தொடர்பு குறித்து எடுத்த முக்கிய முடிவுகள் போன்றவை குறித்து ஜே.பி.சி. விசாரணை நடத்தும். 

இதை ஷேர் செய்திடுங்கள்: