உள்ளாட்சித் தேர்தல்: ஓ.பி.எஸ். தலைமயில் மூவர் குழு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.7 - நடைபெற உள்ள  தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ். தலைமையில் மூவர் குழுவை அமைத்து கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முன்னிட்டு, தோழமைக் கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
கழகப் பொருளாளர், நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக தலைமை நிலையச் செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், மின்சாரம் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்.
இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: