எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.8 - பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (7.9.2011) தலைமைச் செயலகத்தில், 2010 - 2011 ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
2010 - 2011 ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. விக்னேஷ்க்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஜி. பிலிக்ஸ்க்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பி. ராஜசேகர், எஸ். நந்தீஷ், பி. சசிகுமார் ஆகியோருக்கு தலா 6,000 ரூபாய் ரொக்கப் பரிசும் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் ஆர். ஜெயபிரகாஷ்க்கு 18,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஆர். சரவணனுக்கு 12,000 ரூபாய் ரொக்கப் பரிசும், மூன்றாம் இடம் பெற்ற மாணவர் எஸ்.கிருஷ்ணகுமாருக்கு 9,000 ரூபாய் ரொக்கப் பரிசுகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கி, கல்வியில் சிறந்த முறையில் முன்னேறி எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்ந்து வாழ்வில் நலன்கள் பல பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல மாநில ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


