முக்கிய செய்திகள்

அரசு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,செப்.24 - தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த காலியிடங்கள் 1,653 ஆகும். இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. இந்நிலையில் அவற்றில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று முதல் 26 ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான கட்ஆப் மதிப்பெண்களுடன் கூடிய கலந்தாய்வு அட்டவணை சுகாதாரத் துறை இணையதளத்தில் மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கான இணைய தள முகவரி www.tnhealth.org (or) www.tn.gov.in ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: