முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டி கொல்கத்தா அணிக்கு முதல் வெற்றி பெங்களூர் ராயல்சை வீழ்த்தியது

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர், அக். - 1 -  சாம்பியன்ஸ் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாச த்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இது அந்த அணிக்கு இந்தத் தொடரில் முதல் வெற்றியாகும்.  கொல்கத்தா அணி தரப்பில், காம்பீர் மற்றும் காலிஸ் இருவரும் அதிர டியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இருவரும் அரை சதம்  அடித்தனர். துவக்க வீரர் ஹாடின் அவர்களுக்கு பக்கபலமாக ஆடி னார்.  ன்னதாக பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான பிரட்லீ, உனாட்கட் மற்றும் இக்பால் அப்துல்லா ஆகியோர் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். காலிஸ், பதான் மற்றும் பாத்தியா ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். சாம்பியன்ஸ் லீக் டி - 20 போட்டியில் பெங்களூர் சின்னசாமி அரங்கத் தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 9 விக்கெட்டை இழந்து 169 ரன்னை எடுத்தது. அதிரடி துவக்க வீரரான கெய்ல் 25 ரன்னையும், தில்ஷான் 28 ரன்னையும் எடுத்தனர். திவாரி 19 ரன்னையும், அகர்வால் 13 ரன்னையும், கை ப் 5 ரன்னையும் எடுத்தனர். கோக்லி பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தார். இருந்த போதிலும், கடைசி கட்டத்தில், வெட்டோரி அதிரடியாக ஆடி 23 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்னும், பத்கல் 18 பந்தில் 1 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்னும் விளாசினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில், பிரட்லீ, இக்பால் அப்து ல்லா மற்றும் உனாட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவி ர, காலிஸ், யூசுப் பதான் மற்றும் பாத்தியா ஆகியோர் தலா 1 விக்கெ ட் எடுத்தனர். 170 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பெங்களூர் அணி கொல்கத்தா அணிக்கு வைத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டி ங் செய்த கொல்கத்தா அணி அதிரடியில் மிரட்டியது.
துவக்க வீரர் ஹாடின் 27 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 42 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் வந்த காம்பீரும், காலிசுட ன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் 17.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்து கொல்கத்தா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காலிஸ் 47 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்னும், காம்பீர் 31 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 55 ரன்னும் விளாசினர். கொ ல்கத்தா அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
கொல்கத்தா அணி கடைசி ஆட்டத்தில் இன்று வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா என்பது மற்ற ஆட்டங்களின் முடிவை பொறுத்து தான் தெ ரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்