எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அக்.7 - காதல் சின்னமாக கம்பீர தோற்றத்துடன் காணப்படும் 7உலக அதியசங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகால், முகலாயமன்னன் ஷாஜகான் தன் காதல் மனைவி மும்தாஜ் மீது கொண்ட அளவற்ற அன்பினால் கட்டப்பட்டது. உத்தரபிரதேசமாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் 358 ஆண்டுகளுக்கு முன்பு முழுக்க,முழுக்க வெள்ளை நிற பளீர் சலவைக் கற்கலால், இஸ்லாமிய மரபுப்படி 4 மினார்கள், மத்தியில் பெரிய கூண்டு என பல அம்சங்களுடன் கட்டப்பட்டது தாஜ்மகால். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது. இதனால் இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துகொண்டிருக்கும் தாஜ்மகாலில் உள்ள மத்திய கூண்டில் பிளவும் 4புறங்களில் உள்ள 4 மினார்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தாஜ்மகால் இடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கூண்டின் கீழ்பகுதியில் தான் மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டிள்ள பிளவுகளை சரிசெய்யாவிட்டால் இன்னும் 5ஆண்டுகளில் இடிந்துவிழும் என சுற்றுப்புற ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50லட்சம் சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலைப் பார்த்துச் செல்கின்றனர். திடீர் பிளவு காரணமாக அங்கு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாஜ்மகாலை காப்பாற்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்ரா தொகுதி எம்.பி. ராம்சங்கர் போர்க்கால நடவடிக்கை தேவை என்ற பிரசாரத்தை துவக்கி உள்ளார். சர்வதேச கட்டிட கலை நிபுணர்களும் தாஜ்மகால் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இன்னமும் தாஜ்மகால் விஷயத்தில் மவுனம் காட்டிவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


