முக்கிய செய்திகள்

ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார் ரஜினி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, அக்.21 - திருப்பதி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் துலாபார நேர்ச்சையை காணிக்கையாக செலுத்தினார். திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ரஜினிகாந்த் அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்தார். அதன் பின் நாடு திரும்பிய ரஜினிகாந்த், தனது உடல்நிலை சரியானதற்கு திருப்பதி ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் வகையில் திருப்பதிக்கு சென்றார். அவருடன் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும், திரைப்பட நடிகருமான மோகன்பாபுவும் உடன் சென்றிருந்தார். 

பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அங்கு ரஜினிக்காக சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனத்தை முடித்துக்கொண்ட ரஜினிகாந்த், பின்னர் அங்கு துலாபாரம் நேர்ச்சையை செலுத்தினார். ரஜினியின் மனைவி லதாவும் கணவருக்காக முடி காணிக்கை செலுத்தினார். பேரன் லிங்காவுக்கும் முடிகாணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு மகள் செளந்தர்யா திருமணம் முடிந்த போது ஒருமுறை ரஜினி திருப்பதி வந்திருந்தார். அதன்பிறகு இப்போதுதான் ரஜினி திருப்பதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: