முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் நகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராஜபாளையம், அக்.22 - நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வசமிருந்த ராஜபாளையம் நகராட்சியை முதன் முறையாக அ.தி.மு.க. கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் தனலெட்சுமி 21, 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 34,761 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், 2 முறை நகர் மன்ற துணைத் தலைவருமாக இருந்த சுப்பாராஜ் பெற்ற வாக்குகள் 13,012. இவருக்கு அடுத்தபடியாக தி.மு.க. வேட்பாளர் சுமதி 8,939 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் அ.தி.மு.க. மட்டும் 29 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகள் முறையே, காங்கிரஸ் 5, தி.மு.க. 3, ம.தி.மு.க., சி.பி.ஐ. தலா 1 மற்றும் சுயேட்சைகள் 3 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்