முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி - கருணாநிதி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக். 23 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று காலை டெல்லியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்தார். சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து சமீபத்தில் டெல்லி திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி சென்ற கருணாநிதி, நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டிற்கு கருணாநிதி சென்றார். 

அவரை சோனியா காந்தி வரவேற்றார். சுமார் 40 நிமிடங்கள் இருவரும் பேசினர். அப்போது சோனியாவிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். சோனியா காந்தியை சந்தித்த போது கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். நேற்று மாலை 4 மணியளவில் திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி மகள் கனிமொழியை சந்தித்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்து பேசினாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago