முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டமிட்டபடி பெங்களூருக்கு ரத யாத்திரை செல்லும்-அத்வானி

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், அக்.- 24 - கர்நாடகத்திற்கு அத்வானியின் ரத யாத்திரை செல்லாது என்று அனுமானங்கள் நிலவிவரும் வேளையில் தனது ரத யாத்திரை திட்டமிட்டபடி பெங்களூரு செல்லும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக 38 நாள் ரத யாத்திரையை பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்டு வருகிறார். இவர் இம்மாதம் 30 ம்தேதி பெங்களூரு செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. அன்று பெங்களூருவில் நடக்கும் ஒரு பேரணியில் கலந்துகொண்டு பேசுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேரணி, பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கர்நாடக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியுள்ளன. என்றாலும் அத்வானியின் ரத யாத்திரை அக்டோபர் 31 ம் தேதி கர்நாடக கடலோர பகுதிகளான மங்களூர், உடுப்பி போன்ற இடங்களில் தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. கர்நாடகத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டுள்ளதால் அத்வானியின் ரதயாத்திரை கர்நாடகத்திற்கு செல்லாது என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராய்ப்பூரில் அத்வானியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு திட்டமிட்டபடி தனது யாத்திரை கர்நாடகத்திற்கு செல்லும் என்றும், பெங்களூருக்கும் தனது ரத யாத்திரை செல்லும் என்றும் கூறினார். எடியூரப்பா குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அத்வானி, தான் எடியூரப்பாவைப் பற்றி நாக்பூரில் என்ன கூறினேனோ அதே கருத்தில்தான் தான் தொடர்ந்து இருப்பதாகவும், மாறுபட்ட கருத்து எதையும் தாம் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அத்வானி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago