முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்யம் கம்ப்யூட்டர் முன்னாள் தலைவருக்கு ஜாமீன்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.5 - சத்யம் கம்ப்யூட்டர் கம்பனியின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூக்கு சுப்ரீம்கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்தியாவில் பெரிய தனியார் தகவல் தொடர்பு கம்பெனிகளில் ஒன்றாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் கம்பெனியில் ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்தது. கம்பெனி கணக்கில் பொய் எழுதி, கம்பெனி நல்ல நிலையில் இருப்பதாக தகவல் கொடுத்துவிட்டு அந்த கம்பெனி வருமானத்தை தன் மகன் கம்பெனிக்கு திருப்பி ரூ.14 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்தவர் ராமலிங்க ராஜூ.  இதனையொட்டி ராமலிங்க ராஜூ மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐதராபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஐதராபாத் ஐகோர்ட் ஜாமீன் தர மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ஜாமீன்கோரி ராமலிங்க ராஜூம் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் ரிட்மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு ராமலிங்க ராஜூவை தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கியது. ராமலிங்க ராஜூ ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான பெஞ்சில் நடந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ.முடிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கெடு விதித்திருந்தது. ஆனால் அந்த கெடுவுக்குள் விசாரணையை சி.பி.ஐ.யால் முடிக்க முடியவில்லை என்று ராமலிங்க ராஜூ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார். வழக்கு விசாரணையை வேண்டுமென்ற இழுத்தடிக்க ராமலிங்க ராஜூ முயற்சி செய்கிறார் என்று சி.பி.ஐ. சார்பாக குற்றஞ்சாட்டப்பட்டது. ராமலிங்க ராஜூ கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்