முக்கிய செய்திகள்

காமன்வெல்த் ஊழல் குறித்து ஆய்வு அமைச்சர்கள் குழுவின் காலம் நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,நவ.- 7 - காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த ஊழல் குறித்து ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குழுவின் காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதனையொட்டி காங்கிரஸ் எம்.பி.யும் விளையாட்டு போட்டி குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்பட பலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் குறித்து ஆய்வு செய்ய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். இந்த குழுவானது ஊழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஆய்வுப்பணி முடியாமல் இருப்பதால் குழுவின் காலத்தை நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு குழு சிபாரிசு செய்தது. அதன் பேரில் குழுவின் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஊழலில் பல துறைகள் சம்பந்தப்பட்டுள்ளன. ஊழலை சரியாக கண்டுபிடிக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட துறைகளின் பைல்களை சரிபார்க்க வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவை. அதனால் குழுவின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது இந்த குழுவானது தனது ஆய்வு அறிக்கையை அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதிக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என்று குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: