எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி, நவ.- 8 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாண்டி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை ஜே.எம்.எம்.கட்சி அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 30 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக தங்களது கட்சியைச் சேர்ந்த ஜெய்ப்பிரகாஷ் பாய்படேல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவரும், ஜார்க்கண்ட் மாநில துணை முதல்வருமான ஹேமந்த் ஷோரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிபுஷோரன் தலைமையில் அமைந்துள்ள பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாண்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தேக்லால் மகாத்தோ திடீர் மரணமடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு வருகிற 30 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மறைந்த தேக்லால் மகாத்தோவின் இளைய மகன்தான் ஜெய்ப்பிரகாஷ்பாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.எம்.எம். கட்சியின் தலைவர் சிபு ஷோரனிடம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி எப்படி நடக்கிறது என்று கேட்டதற்கு முதல்வர் அர்ஜுன்முண்டா தலைமையில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


