முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜாமீன்: நீதி தாமதப்படுகிறது! வேதனையில் கருணாநிதி

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 12 - 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதில் நீதி தாமதப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2 ஜி வழக்கில் புலன் விசாரணை முடிந்து விட்டது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழுமையான விசாரணை விரைவில் தொடங்கவிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோர் 6 மாதங்களுக்கு மேலாக திகார் சிறையில் வாடி வருகின்றனர். வழக்கு தொடுத்த சி.பி.ஐ. கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.  ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளோ குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதற்கு பிறகு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 437 ன் படி கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றனர். சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள அறிவுரைகளையும் சிந்தித்து பார்க்கும் போது நீதி தாமதிக்கப்படுகிறதோ என்ற வேதனை நெருடலை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு வரும் 1 ம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விவகாரத்திலும் அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் என்று அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!