முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை தொடங்கும் படிப்புகள் சட்ட விரோதமானவை: ஐகோர்ட்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 14- இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெறாமல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தொடங்கும் முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள் சட்ட விரோதமானவை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

எச்.ஐ.வி. மருத்துவம் உள்ளிட்ட 11 முதுநிலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளை அறிமுகப்படுத்த எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து டாக்டர் ரமேஷ் உள்ளிட்ட 25 பேர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன், இப்போது எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தும் பாடங்கள் ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களாக மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது அதே பாடங்களை வேறு பெயரில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. 

இது தவிர, இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் அதிகாரம் பல்கலை நிர்வாகத்திற்கு இல்லை. எனவே இந்த புதிய படிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் இந்த வாதத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மத்திய அரசின் ஒப்புதலை பெறாமல் இத்தகைய புதிய படிப்புகளை பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்துவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்