முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரச்சாரத்தை இரவு 11 மணிவரை நீட்டிக்க மறுப்பு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 10 - தேர்தல் பிரச்சாரத்தை இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை நீட்டிக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. அதனால் இரவு 10 மணிவரை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன்  கடந்த வாரம் அறிவித்தது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 13 ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இதே தேதியில் ஒரே கட்டமாக தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் மார்ச் 19 ம்தேதி துவங்கி 26 ம் தேதியுடன் முடிவடைகிறது. 28 ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசிநாள் மார்ச் 30 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரங்கள் வருகிற ஏப்ரல் 11 ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகின்றன. இதனால் தேர்தல் பிரச்சாரத்திற்கான காலம் அவகாசம் குறுகிய அளவிலேயே இருக்கிறது. அதாவது மொத்தம் 12 நாட்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 12 நாட்களில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வது கடினமான காரியம் என்றும், எனவே தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க குரேஷி மறுத்துவிட்டார். திட்டமிட்டபடி ஏப்ரல் 13 ம் தேதி தான் தேர்தல் நடக்கும் என்றும், இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறிவிட்டார். 

இந்த கோரிக்கைதான் ஏற்கப்படவில்லை தேர்தல் பிரச்சாரத்தை இரவு 11 மணிவரை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களின் அனைத்துக்கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் கமிஷன் கூட்டியிருந்தது. அந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை இரவு 11 மணிவரை  நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அமுலில் இருப்பதால் தற்போது இரவு 10 மணிவரை என்ற கால உச்சவரம்பை இரவு 11 மணிவரை நீட்டிக்க முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை பங்கேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago