முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தமிழ்பேரவை கட்டிடம்விதிமீறல் ஏதும் இல்லை-கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, நவ. - 21 - முத்தமிழ் பேரவை கட்டிடம் கட்டியதில் எந்தவிதமான விதிமீறலும் நடைபெறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயல், இசை, நாடகம் என முத்தமிழின் பெருமையையும், தமிழ் கலாசாரத்தையும் வளர்ப்பதற்காக முத்தமிழ் பேரவைக்கு இடம் வழங்கப்பட்டது. அந்த அறக்கட்டளையினர் குத்தகை விதிகளை எந்தவிதத்திலும் மீறவில்லை. கட்டிடம் கட்டியதிலும் எந்தவிதமான விதிமீறலும் இல்லை. அந்த இடத்துக்கு மிகவும் அருகில் உள்ள தமிழக அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபத்துக்காக 5 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி பல ஆண்டுகளாகியும் இன்னும் கட்டப்படாமல் இருக்கிறது.  அதே பகுதியில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு ஜெயலலிதா ஆட்சியிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  பரத நாட்டிய கலை வளர்ச்சிக்காக அதே பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முத்தமிழ் பேரவை அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட இடத்தை மட்டும் அரசு திரும்ப எடுத்துக் கொள்ள முயற்சிப்பது எத்தகைய காழ்ப்புணர்ச்சி என்ற விபரமெல்லாம் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசே ஒரு கையால் கொடுத்ததை மற்றொரு கையால் திரும்ப பெற என்ன தேவை ஏற்பட்டு விட்டது. ஆட்சிகள் மாறினாலும் அரசு ஒன்றுதானே. அரசு வேண்டுமானால் பதில் மனுவை நான்கு வாரத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறி இடைக்கால தடை விதித்துள்ளார். இதில் இருந்தாவது அரசை ஆள்வோர் பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்