முக்கிய செய்திகள்

உலகின் முதல் பணக்காரர் கார்லோஸ்

Worlds-Richest-Man-Carlos-Slim

 

நியுயார்க்,மார்ச்.11 - உலகின் முதல் பணக்காரராக மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் இருந்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் நீண்ட காலமாக உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார். தற்போது அவரை மெக்சிகோ நாட்டை சேர்ந்த கார்லோஸ் பின்னுக்கு தள்ளியுள்ளார். அமெரிக்க பத்திரிக்கையான போபர்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

இந்த ஆண்டு வெளிவந்த அந்த பத்திரிக்கையில் கார்லோஸ் முதலிடத்தை பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டை விட இவருடைய சொத்து மதிப்பு 90 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. பில்கேட்ஸ் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியுடன் 2 வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த வாரண பெப்பட் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3 இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த லட்சுமி மித்தல், முகேஷ் அம்பானி ஆகியோர் முறையே 6 மற்றும் 9 வது இடங்களை பிடித்துள்ளனர். ரிலையன்ஸ் நிறுவன அனில் அம்பானி 103 வது இடத்தில் உள்ளார். உலக பணக்காரர்களில் 413 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். 115 பேர் சீனாவையும், 101 பேர் ரஷ்யாவையும், 55 பேர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: