முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணை தண்ணீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி நவம் 25 - ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணர் திறப்பு. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து

தண்ணீரை அமைச்சர்கள் செல்லுார் ராஜு சுந்தர்ராஜன் திறந்து வைத்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவுப்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து வைகையாற்றில் வினாடிக்கு 2000 கனஅடி வீதம் 20 நாட்களுக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த தண்ணீர் மேல் மதகுகள் வழியாக திறக்கப்பட்;டது. இதன் மூலம் மூன்று மாவட்டங்;களைச் சேர்ந்த 374 கண்மாய்கள் நிரம்பப்பெற்று 1,36,109 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். வைகை அணையின் நீர்மட்டம் 67.75 அடியாக இருந்தது. நீர்வரத்து 1159 கனஅடி நீர் இருப்பு 5261 கனஅடி சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஆற்றுவழியாக 2000 கனஅடியும் மதுரை திண்டுக்கல் திருமங்கலத்திற்கு கால்வாய் மூலமாக 1600 கனஅடியும் மதுரை மற்றும் சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 60 கனஅடியும் மொத்தம் 3660 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் பின்பு  அமைச்சர் செல்லுார் ராஜு கூறியதாவது.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் பாசனவசதிக்காக 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவதில் முதன்மையாக இருந்து பல்வேறு துறைகளின் மூலம் விவசாயிகளுக்கு நன்மைகளை செய்து 2ம் பசுமை புரட்சியை ஏற்படுத்திஉள்ளார். இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 27,529 ஏக்கரும் சிவகங்கை மாவட்டத்தில் 40,743 ஏக்கரும் ராமநாதபுரம் 67,837 ஏக்கர் வைகை பூர்வீக பாசன நிலங்கள் மேலும் பெரியார் பாசன நிலங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,996 ஏக்கரும் மதுரை மாவட்டத்தில் 1,42,008 ஏக்கரும் சிவகங்கை மாவட்டத்தில் 6,039 ஏக்கரும் பாசன வசதி பெறும். என்றார்.. அவருடன் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் பெரியகுளம் எம்;.எல்.ஏ லாசர் மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் டி.ஆர்.என். வரதராஜன் தொகுதி செயலாளர் ்ஸ்வரி முருகன் ஒன்றிய செயலாளர்கள் பால்பாண்டியன் செல்லமுத்து தேனி நகர் மன்ற தலைவர் முருகேசன் செயற்பொறியாளர் தனபாலன் உதவி செயற்பொறியாளர்கள் மெய்யழகன் முத்தமிழ் செல்வி உதவி பொறியாளர்கள் கணேசன் மூர்த்தி ராமன் செல்வம் பரமெஸ்வரன் ஜெயராஜ் ஆகியோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony