முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.25 -  மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜ்யசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக உளவுத் துறைக்கு தகவல் எதுவும் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் பதில் அளிக்கையில், 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை சர்வதேச விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!