முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவில் காங்கிரஸ் பல்டி- ராகுலே பின்னணி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.4 - வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவதில் காங்கிரஸ் கட்சி அடித்த பல்டிக்கு ராகுல் காந்தியே காரணம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் வரம்பிற்குள் பிரதமர் உள்ளிட்ட உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும் கொண்டு வர வேண்டும் என்றும் அதுதான் வலுவான லோக்பால் மசோதாவாக இருக்கும் என்றும் பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறி வருகிறார். 

இந்த மசோதா தற்போது பாராளுமன்ற நிலைக்கமிட்டியின் பரிசீலனையில் இருக்கிறது.லோக்பால் வரம்பிற்குள் அரசு  ஊழியர்கள் குரூப் சி மற்றும் டி பிரிவுகளையும் சேர்க்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த குரூப் சி மற்றும் டி பிரிவுகளை லோக்பால் வரம்பிற்குள் சேர்ப்பதற்கு  பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதலில் இந்த சி மற்றும் டி. பிரிவுகளை சேர்க்கலாம் என்று சம்மதம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி இப்போது அந்த விஷயத்தில் அந்தர் பல்டி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின்  பொதுச்சொயலாளரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியே காரணம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்கள் தயாரித்த ஜன் லோக்பால் போலவே  அரசாங்கமும் லோக்பால் மசோதாவை கொண்டு வரும் என்றும் அதில் சி.மற்றும் டி. பிரிவு அரசு ஊழியர்களையும் கொண்டு வரப்போவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுத்து மூலமாக உறுதி அளித்திருந்தார்.  ஆனால் இப்போது  லோக்பால் வரம்பிலிருந்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் விலக்கப்பட்டுள்ளனர். இந்த அந்தர் பல்டிக்கு ராகுல் காந்தியே பின்னணியில் இருக்கிறார் என்றும் ஹசாரே கூறினார்.

லோக்பால் வரம்பிற்குள் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களை சேர்க்காவிட்டால் அப்புறம் நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்கவே முடியாது என்றும் ஹசாரே கூறினார்.

தேர்தல் கமிஷன் என்பது ஒரு அரசியல்சாசன அமைப்பு. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப பெறும் அதிகாரம் வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஆனால் லோக்பால் என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு. அது சுதந்திரமான முடிவுகளை எடுக்கும்.அரசு செல்வாக்குகளை ஒதுக்கிவிட்டு லோக்பால் சுதந்திரமாக செயல்படக்கூடியது. சி.பி. ஐ.யை கூட அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி சுதந்திரமான புலனாய்வு அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். அப்படிப்பட்ட நிலையில் லோக்பால் அமைப்பை அரசு அமைப்பாக கொண்டு வர நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற முட்டுக்கட்டை குறித்து ஹசாரேவிடம் கேட்டதற்கு பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பா.ஜ.க.வை மட்டும் எப்படி குற்றம் சொல்ல முடியும்? பாராளுமன்றத்தை  சுமூகமாக நடத்த மத்திய அரசுக்கு தில் இல்லை. அரசு அதன் வேலையை செய்யட்டும் நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம். அதே போலத்தான் எதிர்க்கட்சிகளும் அவர்கள் வேலையை செய்கிறார்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த போவதாக ஹசாரே அறிவித்து இருக்கிறார். இது தொடர்பான யுக்திகளை வகுக்க இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் கூடி விவாதிக்க இருக்கிறார்கள். அனேகமாக 14 ம் தேதி இந்த கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்