முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா-தமிழகம் நலன் கருதி பிரிவினை சக்திகளுக்கு இடம் தரக்கூடாது

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 11 - முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரளா, தமிழகம் நலன் கருதி எந்த ஒரு பிரிவினை  சக்திகளுக்கு இடம் தரக்கூடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:- 1886​1895 ஆம் ஆண்டுகளில் சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணை ஆகும்.  புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள், nullநீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்வதால் அவ்வணைகள் உறுதித் தன்மையுடன் இருக்கின்றன.  பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில், திருவாங்கூர் மகாராஜாவுக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை 29.10.1886 அன்று ஏற்பட்டது.  ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் சுமார் 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது.  இந்த அணையின் nullநீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.  அதாவது, 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல் மற்றும் மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும், மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு ஒப்பந்தமும் ஏற்பட்டன.  1886 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. புவிஈர்ப்பு விசை அடிப்படையில் கட்டப்பட்ட அணைகள் நில அதிர்வுகள் மற்றும் நீரின் அழுத்தங்களை தனது பளுவினால் எதிர்கொள்ளும். அஸ்திவார பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக் கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில், அணையின் முழு nullநீளத்திற்கும், 9 அடி இடைவெளியில் 95 கம்பிகள் செலுத்தப்பட்டு சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.  நீnullண்டகால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி அகலத்திற்கு தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும்  புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய nullநீர் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, கட்டுமானத்தை வலுப்படுத்தும் அதே சமயத்தில், புதிய கட்டுமானத்தில் 10 அடி மற்றும் 45 அடி உயரத்திற்கு இரண்டு வடிகால் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அணையிலிருந்து கசியும் nullநீர் அன்றாடம் கணக்கிடப்படுகிறது. அணை பாதுகாப்பாக, வலுவாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், ஒரளவு nullநீர் கசிவு அணையிலிருந்து வெளியேறுவது அவசியம் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், அணையின் nullநீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 152 அடிக்கும் மேலாக உயர்கையில், அணையை பாதுகாக்கும் பொருட்டு, உபரி nullநீர், ஏற்கெனவே உள்ள 36 ஒ 16 அடி கொண்ட 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதன் மூலம், ஒரு வினாடிக்கு 86,000 கன அடி nullநீரை வெளியேற்ற முடியும். இது மட்டுமல்லாமல், மத்திய nullர் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக வினாடிக்கு 36,000 கன அடி nullநீரை வெளியேற்றும் திறன் கொண்ட 40 ஒ 16 அடி அளவுள்ள மூன்று மதகுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, தற்போது அணையிலிருந்து தோராயமாக வினாடிக்கு 1,22,000 கன அடி உபரி nullரை வெளியேற்ற முடியும். இதிலிருந்து, அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதும், பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. உச்ச nullநீதிமன்றம், 27.2.2006 தேதிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீnullர்மட்டத்தை முதலில் 142 அடி உயர்த்திக் கொள்ளவும், அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாட்டிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.  மத்திய nullநீர் ஆணையம் திருப்தியடையும் வகையில் அணை பலப்படுத்தப்படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிவடைந்த பிறகு, அணையின் nullநீர்மட்டம் 152 அடி அளவுக்கு உயர்த்தப்பட அனுமதிப்பதற்கு முன்னர், தனிப்பட்ட  வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் உச்ச nullநீதிமன்றம் அத்தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீnullதிமன்றத்தின் இந்த ஆணையை முடக்கும் வகையில், கேரள பாசன மற்றும் nullநீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006 கேரள சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, இந்தத் திருத்தச் சட்டம் 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.  இந்தச் சட்டத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையின் முழு nullநீர்மட்டம் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டம் அரசமைப்பிற்கு முரணானது என்று கூறி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் வழக்கு இன்னமும் உச்ச நீnullதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் மனுவை உச்ச nullநீதிமன்றம் விசாரித்த போது, nullநீதிபதிகள் டி.கே. ஜெயின், முகுந்தகம் சர்மா மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய உச்ச நீnullதிமன்ற அமர்வு, மாநிலங்களுக்கிடையேயான நதிநீnullர் தாவாவில், உச்ச nullநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தா வண்ணம், ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தை இயற்றினால், அது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்தது. 142 அடி வரை அணையின்  nullநீர்மட்டத்தை தமிழ்நாடு   உயர்த்திக்    கொள்ளலாம் என்று இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், nullநீங்கள் (கேரளா) அதை நடைமுறைப்படுத்தா வண்ணம் அணையின் முழு nullநீர்மட்டம் 136 அடி தான் என்று சட்டம் இயற்றுவது சரியா? என்று கேரளாவிற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவானிடம் உச்ச nullநீதிமன்றம் வினவியது. உச்ச nullநீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், உச்ச nullநீதிமன்றத்தின் புனிதத் தன்மை என்னவாகும்? என்று கேட்டதற்கு, இது மக்களின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக கேரள வழக்கறிஞர் தெரிவித்தார். இந்தத் தருணத்தில், இந்த nullநீதிமன்றமும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதே அளவு கவலை கொண்டிருக்கிறது.  தீர்ப்பினை வழங்குவதற்கு முன் இரு தரப்பினர் தெரிவித்த அனைத்து விவரங்கள் மற்றும் கவலைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறது என்று nullநீதிபதி ஜெயின்  கருத்து தெரிவித்தார். மத்திய nullநீர் ஆணையத்தின் ஆய்வுகளுக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்தபோது, மத்திய nullநீர் ஆணையம் சட்டமுறையான ஓர் அமைப்பு, எனவே அதனை களங்கப்படுத்த வேண்டாம் என nullநீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  இதனையடுத்து, 5 nullநீதிபதிகள் அடங்கிய உச்ச nullநீதிமன்ற அரசமைப்பு அமர்வு 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், nullநீதிபதிகள் டி.கே. ஜெயின், பி. சுதர்சன் ரெட்டி, முகுந்தகம் சர்மா, ஆர்.எம். லோதா மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அரசமைப்பு அமர்வு, உங்களுடைய வாதங்கள் ஆதாரமற்ற, ஏமாற்றுகின்ற, தவறான, மற்றும் வார்த்தை ஜாலங்களை கொண்டதாக அமைந்துள்ளன. இதை தக்க ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. முல்லைப் பெரியாறு அணையின் nullநீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தினால், அணை உடைந்து, மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற கேரளாவின் வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்பதால் இது போன்ற கருத்தை உச்ச nullநீதிமன்றம் தெரிவித்தது.  அணையின் உச்சபட்ச nullநீர்மட்டம் 155 அடி எனினும், 1924, 1943 மற்றும் 1961 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, அணையின் nullநீர்மட்டம் முறையே 153.9 அடி, 154.8 அடி மற்றும் 152.00 அடியினை எட்டியுள்ளதால், கேரளாவின் வாதத்தை ஏற்க இயலாது என்று இவ்வமர்வு தெரிவித்தது.
இவ்வழக்கில், கேரள அரசின் 2006​ஆம் ஆண்டைய சட்டத் திருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்ட மற்றும் அரசமைப்பு ரீதியான அம்சங்களை தவிர ஏனைய நிலைகளை பரிசீலிக்கும் பொருட்டு, முன்னாள் உச்ச nullநீதிமன்ற தலைமை nullநீதியரசர் டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரம் படைத்த குழு ஒன்றை உச்ச நீnullதிமன்றம் 18.2.2010 அன்று நியமித்தது.  தமிழ்நாடும், கேரளாவும் தங்கள் மாநிலங்களின்  சார்பாக இரண்டு உச்ச நீnullதிமன்ற முன்னாள் nullநீதியரசர்களை நியமித்தன. இந்த அதிகாரம் படைத்த குழு தனது அறிக்கையை 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீnullதிமன்றத்தின் முன் அளிக்க இருக்கிறது.  இந்தக் குழு, முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்காக மத்திய நீnullர் ஆணையம், மத்திய nullநீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவைத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள், முல்லை பெரியாறு அணையில், வெள்ள nullநீர்மட்டத்தைவிட அதிகமான உயரத்தில் தான் அமைந்துள்ளன.  கேரளாவின் இடுக்கி nullநீர்த்தேக்கம் வினாடிக்கு 4,00,000 கன அடி அளவு வெள்ளப் பெருக்கினை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  உச்சnullநீதிமன்றம் தனது 27.2.2006ஆம் தேதிய ஆணையில் அதிக அளவில் மழை பெய்த போதிலும் இடுக்கி nullநீர்த் தேக்கம் அதன் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.  அதன் முழுக் கொள்ளளவு 70.5 டி.எம்.சி அடி ஆக இருந்த போதிலும், அதில் இது வரை 57.365 டி.எம்.சி அடி வரை தான் nullநீர் நிரம்பியுள்ளது.  மிகவும் மோசமான நிலை ஏற்படும் என்று எடுத்துக் கொண்டாலும், இடுக்கி nullநீர்த் தேக்கம் 11 டி.எம்.சி. அடிக்கும் மேலான nullநீரை உள்வாங்கிக் கொள்ளும் என்பது தெரிய வருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி nullர்த் தேக்கத்திற்கு உபரி நீnullர் செல்லும் போது அதன் வேகம் வினாடிக்கு 3 அடி வீதம் தான் இருக்கும். முல்லைப் பெரியாறு அணையின் nullநீர்மட்டம் 136 அடியாக இருக்கும் போது, அதன் nullநீர்ப்பரப்பு 4,678 ஏக்கராகும்.  155 அடி வரை nullநீர் தேக்கப்பட்டால், அதன் nullர்ப்பரப்பு 8591 ஏக்கராகும்.  nullண்ட காலமாக அணையில் 136 அடிக்கு மேல் nullர் தேக்கப்படாததால், அந்த nullநீர்ப்பரப்பு பகுதிகளை கேரளா நில அபகரிப்பாளர்களால் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் விடுதிகள் மற்றும் பிற கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.  அணையின் nullர் மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டால், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட விடுதிகள் நீnullரில் முழ்கும்.  எனவே, முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என ஒரு சிலர் கருதுகின்றனர். எந்தத் தகுதியான காரணத்தின் அடிப்படையிலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று கூறுவதை நம்ப முடியாது. கேரள மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வு, பீதி ஏற்படுத்தப்பட்டு வருவது துரதிருஷ்டவசமானது. முல்லைப் பெரியாறு அணை, புது அணையைப் போன்று முழுவதும் பாதுகாப்பாக உள்ளதால், தன்னல அக்கறை கொண்டோரின் சதிச் செயலை புரிந்து கொண்டு, முல்லைப் பெரியாறு அணை புது அணையைப் போல் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், எனவே அது இந்தப் பகுதியில் உள்ள மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தலாக எள்ளளவும் இல்லை என்பதையும் கேரள மக்கள்உணர வேண்டும். எனவே இரு மாநிலங்களும் சுமுகமான உறவினை நிலை நிறுத்தி பேணும் பொருட்டு உறுதி nullண்டுள்ளதால், இரு மாநிலங்களின் நலனைக் கருதி, எந்த ஒரு பிரிவினை சக்திகளுக்கும் இடம் தரமால் இருக்க வேண்டும் என கேரள மக்களை நான் வேண்டுகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்