முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராமங்களில் உள்ளாட்சி நிர்வாக செலவுகளுக்கு ரூ.3,053 கோடி நிதி ஒதுக்கீடு-ஜெயலலிதா

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச. - 12 -கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் புதியதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். இதற்காக உள்ளாட்சி நிர்வாக செலவுகளுக்காக ரூ.3,053 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஊரக வளர்ச்சி என்பதால், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்​அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், ஊராட்சிகளினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்று அடையவேண்டும், கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வது முழுவதுமாக தடுக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில், புதியதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் என்ற ஒரு திட்டத்தினை முதல்​அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.  அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு, மாநில நிதி ஆணைய மானியமாக, 3,053 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து முதல்​அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்நிதியிலிருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்த பட்சம் மாதம் ஒன்றுக்கு 25,000/​ ரூபாய் வீதம் வருடம் ஒன்றிற்கு 3 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்படும். இதுமட்டுமன்றி, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.   ரூ.3,053 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் நிதியிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக செலவுகள், குடிnullநீர், தெரு விளக்கு மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) ஆகியவைகளுக்கு செலவிடப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்