முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகளை தேசிய மயமாக்க வேண்டும்: கலாம்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.15 - இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் அக்ரிகான் ​ 2011 என்ற வோளண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:​ இந்தியாவில் தற்போதைய உணவு உற்பத்தி 235 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது. இது 170 மி. ஹெக்டேரில் கிடைக் கிறது. அடுத்த 9 ஆண்டில் நமது தேவை 400 மி. டன் என்ற அளவில் இருக்கும். இதே போல் நீர் நிலைகளை கணக்கிட்டால் குறைந்த தண்ணீரை வைத்து, குறைந்த நிலத்தை வைத்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு நீர் நிர்வாகம் மிகவும் அவசியம். நம் நாட்டில் குறைந்தது 1,500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதில் 300 டி.எம்.சி. தண்ணீரை சேமித்தாலே நமது தேவை நிறைவேறிவிடும். நாடும் வளமாகும். இதற்கு பெரிய நதிகளையும், பெரிய ர்நிலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போல், எரிசக்திக்கு கிரிட் கொண்டு வந்தது போல் அனைத்து நதிகளை, அணைகளை தேசிய மயமாக்க வேண்டும். பெரிய அணைகளை பாதுகாக்கும் பொறுப்பையும், பராமரிக்கும் பொறுப்பையும், ராணுவம், கடற்படை போன்ற பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். நம் நாட்டில் மாநிலங் களுக்கிடையே தண்ணீரை பங்கிடுவதில் தகராறு வருவது போல் அமெரிக்காவிலும் நதிர் தாவா இருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டி உள்ளனர். அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை, அணைகளை தேசிய மயமாக்க வேண்டும்.  இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony