முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பிரச்சினை: சரத்குமார் அறிக்கை

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.17 - முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் முதல்வரின் அன்பு வேண்டு கோளை ஏற்று பிரச்சினையை மேலும் சிக்கலாக்காமல் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அகில இந்திய சம்த்துர மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் ஏற்பாடு செய்து, முல்லைப் பெரியாறு அணையில் தமிழருக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். மேலும் தமிழக மக்கள் உணர்ச்சிகளுக்கும், கொந்தளிப்புகளுக்கும் ஆளாகாமல் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

அரசியல் கட்சிகளும, பிற அமைப்புகளும் இப்பிரச்சினையில் கண்டனக்குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்துவது, நியாமானதுதான் என்றாலும், அவை வன்முறையைத் தூண்டுவதாக அமைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் முடிவு தமிழகத்திற்கு சாதமாக அமையும் மத்திய அரசு இரு மாநிலங்களுக்கிடையே சுமூகமான சூழலை விரைவில் ஏற்படுத்தித்தரும் என்ற நம்பிக்கையில் அனைவரும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காக்கவேண்டும்.

தமிழகத்தில் இருக்கும் மலையாள சகோதரர்களுக்கும், கேரளத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் இடையே நிலவி வரும் சகோதரத்துவமும், கலாச்சார ஒற்றுமையையும், நட்பும், நல்லுறவும் நீடிக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை சுமூகமாக பேசித்தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைதான். வன்முறைகள் என்றும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. வன்முறைமூலம் பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் இழப்பு ஏற்படுத்துவது பிரச்சினையை மேலும் தீவிரமாக்குமே தவிர பலன் கிடைக்காது. அந்த அடிப்படையில் தான் தமிழக முதலமைச்சர் இரு மாநில மக்களும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

வன்முறையில் ஈடுபடுவோரை இரு அரசுகளும் கண்காணித்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்