முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய அணிக்கு சேப்பலின் ஆலோசனை பலன் தராது - கங்குலி

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. - 20  - ஆஸ்திரேலிய அணிக்கு சேப்பலின் ஆலோசனை பலன் தராது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் சேப்பல். இதிய அணியை எப்படி எதிர்கொள்ளது என்பது தொடர்பாக சேப்பல் சமீபத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மிக்கி ஆர் த்தருடன் ஆலோசனை நடத்தினார். டெண்டுல்கரை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக அவர் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதற்கு இந்திய அணியி ன் முன்னாள் கேப்டன் கங்குலி பதிலடி கொடுத்து இருக்கிறார். சேப்பலின் ஆலோசனையால் ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவித பல னும் கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறி தாவது - ஆஸ்திரேலய அணி கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியா வந்தது. அப்போது அந்த அணிக்கு கிரேக் சேப்பல் ஆலோசனை வழங்கினார். ஆனால் நாங்கள் அந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி

னோம். இதனால் அவர் தற்போது அணி வீரர்களுடன் இருந்து ஆலோசனை வழங்கினாலும் எந்த வித பலனும் இருக்காது என்றே கருதுகி றேன். அவரால் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது. சேப்பல் இந்

திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தனிப்பட்ட பகை யுடன் நடந்து கொண்டார். அவர் தொடர்ந்து தவறு செய்து வந்தார். அப்போது கேப்டனாக இருந்த டிராவிட்டும், அவரது தவறுகளை தடு த்து நிறுத்தவில்லை. அவரை பயிற்சியாளராக நியமித்தது மிகப் பெரி ய தவறு. டெண்டுல்கர், லட்சுமண், ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் ஆகி

ய வீரர்களுக்கு எதிராக அவர் இருந்தார்.  இவர்கள் அனைவருமே உலகின் சிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். தற்போதும் அவர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார்கள். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். 

கிரேக் சேப்பல் கடந்த 2005 -ம் ஆண்டு முதல் 2007 -ம் ஆண்டு வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் பயிற்சியாள ராக இருந்த போது, கங்குலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது. 

இதனால் 2005 -ம் ஆண்டு நவம்பர் மாதம் கங்குலி பதவியை இழந்

தார். டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2006 ஜனவரியில் டெஸ்ட் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். எதிர்ப்பு காரணமாக கங்குலி அணிக்கு மீண்டும் திரும்பினார். 

2007 -ம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே இந்திய

அணி வெளியேறியது. அப்போது சேப்பல் தான் பயிற்சியாளராக இருந்தார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

பயிற்சியாளர் பதவியை விட்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் சென்ற பிறகு, அவரை ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்து இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்