முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்திற்கு தடை

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.30 - நடிகை காஜல் அகர்வால் நடித்து கொடுத்த விளம்பரத்தை பயன்படுத்த கூடாது என்று வி.வி.டி தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு சென்னை ஜகோர்ட் உத்தரவுபிறப்பித்துள்ளது. இவர் நான் மகான் அல்ல, பழனி சரோஜா போன்ற படங்களில் நடித்தவர். நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்தவர். இவர் வி.வி.டி தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அதை தடுத்து நிறுத்த கேட்டு நடிகை காஜல் அகர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த நிறுவனத்தின்  விளம்பர படத்திற்காக கடந்த 29-12-2008-ல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டேன். ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் நான் நடித்த விளம்பரத்தை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இதனால் நான் மற்ற நிறுவன ஒப்பந்தத்தில் பயன்பாட்டில் பாதிப்பு எற்படுகிறது. ஆகவே எனது விளம்பரத்தை வி.வி.டி தேங்காய் எண்ணெய் நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். எனக்கு 2.5 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கே.சர்மா நடிகை காஜல் அகர்வால் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தாமல். விளம்பரம் செய்து கொள்ள வி.வி.டி தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகை காஜல் அகர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் நடிகை காஜல்  அகர்வால் நடித்த விளம்பரத்தை பயன்படுத்த கூடாது என்று எண்ணெய் நிறுவனத்திற்க்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நடிகை சார்பில் வக்கீல்கள்  மணோகரன். சகாதேவன் ஆகியோர் ஆஜராகி வாதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony