எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.- 2 - மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் உள்ள கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டுக்காக மதுரையில் பல்வேறு ஓட்டல்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை சங்கம் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நிகழ்ச்சிகள் துவங்கின. இசை, நடனம், போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. 100 வகை உணவுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சரியாக இரவு 12 மணிக்கு விளக்குள் அணைக்கப்பட்டு மீண்டும் போடப்பட்டது. இதை தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த ஜோடிகள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிகொண்டனர். இதே போல் பாண்டியன் ஓட்டல், தமிழ்நாடு ஓட்டல், தாஜ் ஓட்டல் உள்பட மதுரையின் முக்கிய ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாடட்டங்கள் அமர்க்களமாக நடந்தது. இரவு வாகனங்களில் வேகமாக வந்த இளைஞர்களை போலீசார் மறித்து அறிவுரை கூறினர். மேலும் மதுரையில் உள்ள தூயமரியன்னை பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் நரிமேடு, புதூர், அண்ணாநகர், பசுமலை உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாண்டான நேற்று அதிகாலை 4 மணியிலிருந்தே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. காலை 6 மணக்கே வரிசை சித்திரை வீதிக்கு வந்துவிட்டது. பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மீனாட்சியை தரிசித்தனர். இதே போல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அழகர்கோவில், பழமுதிர்சோலை, கூடலழகர் கோவில், திருமோகூர்,திருவாதவூர், ஒத்தக்கடை நரசிங்க பெருமாள்கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


